சமையல் வேலை சீக்கிரம் முடிய வேண்டுமா? அப்போது இந்த தக்காளி குழம்பையும், சுக்கு குழம்பையும் உடனே இப்படி செய்யுங்கள்.

kulambu
- Advertisement -

சாப்பிடுவதற்கு எப்படி சாதம் முக்கியமோ அதே அளவிற்கு சாதத்துடன் சேர்த்து சாப்பிட குழம்பும் மிக முக்கியமாகும். தினம் ஒரு குழம்பு வைப்பதென்பது மிகவும் யோசித்து செய்யக்கூடிய வேலைதான். ஒரு நாள் வைத்த குழம்பை மறுநாளும் சமைக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாளும் மதிய வேளைக்கென்று புது புது குழம்பினையே சமைக்க வேண்டும். வேலைப்பளு அதிகம் இருக்கும் நாட்களில் சீக்கிரத்தில் சமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த சமயங்களில் எளிதில் சமைப்பதற்கு இந்த தக்காளி குழம்பும், சுக்கு குழம்பும் ஏற்றதாக இருக்கும். வாருங்கள் அதனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

kara-chutney2

தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, எண்ணெய் – 3 ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், தேங்காய் – கால் மூடி, சீரகத் தூள் – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். தக்காளியை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

kuzambu7

அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அவை பொரிந்ததும் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். அதன்பின் உப்பு, கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான தக்காளி குழம்பு தயாராகிவிடும்.

- Advertisement -

சுக்கு குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:
சுக்கு சிறிய துண்டு – ஒன்று, மிளகு – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், நறுக்கிய தக்காளி – ஒரு கப், எண்ணெய் – 5 ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து.

kuzambu8

செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெறய் விடாமல் சுக்கு, மிளகு, வெந்தயம் ஆகிய மூன்றையும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். குழம்பிலிருந்து எண்ணெய் நன்றாக பிரிந்து வந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை தூவி ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான சுக்கு குழம்பு தயாராகிவிடும்.

ஒருமுறை இந்த தக்காளி குழம்பு மற்றும் சுக்கு குழம்பினை செய்து பாருங்கள். சாதத்துடன் பிசைந்து சாப்பிட நாவில் ஒட்டிக்கொள்ளும் சுவையுடன் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -