பாரம்பரிய முறையில் வெங்காயம் தாளித்து தேங்காய் சட்னி இப்படி செஞ்சு பாருங்க வீட்டில் எல்லோரும் உங்களை பாராட்டி தள்ளிருவாங்க!

thalicha-coconut-chutney
- Advertisement -

பாரம்பரிய முறையில் தேங்காய் சட்னி செய்பவர்கள் வெங்காயம் தாளித்து அதில் சேர்ப்பது வழக்கம். தேங்காய் சட்னியில் வெங்காயம் யாராவது தாளிப்பார்களா! என்று ஆச்சரியப்பட வேண்டாம். பாட்டிமார்கள், நம் முன்னோர்கள் கண்டிப்பாக தேங்காய் சட்னிக்கு இது போல சின்ன வெங்காயம் நல்லெண்ணையில் தாளித்துக் கொட்டி செஞ்சு கொடுப்பார்கள். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, வீட்டில் எல்லோரும் பாராட்டி தள்ளிருவாங்க. சுவையான தாளிச்ச தேங்காய் சட்னி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, வர மிளகாய் – 7, பெரிய வெங்காயம் – பாதி, பூண்டு பல் – 2, கல் உப்பு – தேவையான அளவு, புளி – சிறு கோலிக்குண்டு அளவு, பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் – சிறிதளவு, வர மிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, சின்ன வெங்காயம் – 4.

- Advertisement -

தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை மூடி தேங்காயை நன்கு துருவி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காயை அதன் மேல் தோல் பகுதியை நீக்கி துருவி சேர்க்கும் பொழுது தான் ருசி அதிகமாக இருக்கும். தேங்காய் துருவல் சேர்த்த பின்பு அதனுடன் காரத்துக்கு 7 வர மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் காரத்திற்கு ஏற்ப கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். வாசனைக்கு 2 பல் பூண்டை தோலுரித்து சேருங்கள். இது வாய்வு இருந்தால் எடுத்து விடும்.

பின்னர் இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை, அரை வெங்காயம், ஒரு சிறு கோலி குண்டு அளவுக்கு புளியை உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும். நீங்கள் சேர்க்கும் உப்பானது கல் உப்பாக இருந்தால் ரொம்பவும் நல்லது. பின்னர் நைசாக அரைத்து எடுத்து ஒரு சிறு தாளிப்பு இதற்கு சேர்க்க வேண்டும். தாளிப்பு கொடுப்பதில் தான் தேங்காய் சட்னியின் ருசியும் அடங்கி இருக்கிறது. வித்தியாசமான முறையில் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெயை விட்டு நன்கு காய விடுங்கள். நல்லெண்ணெயுடன் சின்ன வெங்காயம் தாளித்தால் அவ்வளவு அருமையான வாசம் வீடு முழுவதும் வரும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

பெருங்காயத் தூள் கால் ஸ்பூன் -க்கும் குறைவாக சேருங்கள். இரண்டு வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து கடைசியாக பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் சட்னியுடன் இதைச் சேர்த்து சுடச்சுட இட்லி, தோசையுடன் பரிமறி பாருங்கள், ஆஹா… என்று சொல்லிக் கொண்டே சாப்பிடலாம், அவ்வளவு ருசியாக இருக்கும். இதே மாதிரி முறையில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -