திருமணத்தடைக்கும், கணவன் மனைவி பிரச்சினைக்கும், விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய பரிகாரம். நிச்சயம், 48 நாட்களில் கைமேல் பலன்.

manjal-pillaiyar3

விநாயகர் சதுர்த்தி வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கின்றது. இந்த ஆண்டு 22-8-2020 நாள், வருகின்ற சனிக்கிழமை தான் விநாயகர் சதுர்த்தி வருகின்றது. முன்கூட்டியே இந்த பதிவினை கொடுப்பதற்குக் காரணம், பிரச்சினை உள்ளவர்கள் யாரும் இந்த பரிகாரத்தை தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான். வருடத்திற்கு ஒருமுறை, வரக்கூடிய இந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில், விநாயகர் வழிபாட்டோடு சேர்த்து, திருமணத்தடை உள்ளவர்கள், கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை உள்ளவர்கள், இந்த பரிகாரத்தை செய்ய தவறி விடாதீர்கள்! சுலபமான பரிகாரம், கை மேல் பலன் கிடைக்கக்கூடிய இந்தப் பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து அனைவரும் பலனடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, பரிகாரத்தை பார்க்க தொடங்கலாம்.

manjal-pillaiyar1

உங்களுடைய வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை எந்த முறைப்படி செய்கிறீர்களோ அதே முறைப்படி செய்யலாம். பொதுவாகவே, விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு மாலை நேரம் சிறந்ததாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சில பேர் வீடுகளில், மண் பிள்ளையார் வாங்கி வைத்து வழிபாடு செய்வார்கள். சில பேர் வீடுகளில், விநாயகரது திருஉருவ சிலை உலோகத்தாலானது இருக்கும். அது விநாயகர் சதுர்த்தி வழிபாடு! எது எப்படியாக இருந்தாலும், இந்த பரிகாரத்தை மஞ்சளால் பிடித்து வைத்த பிள்ளையாரை வைத்துதான் செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, உங்களுக்கு தெரிந்த படி, மஞ்சள் பிள்ளையாரை வெற்றிலையின் மேல் பிடித்து வைத்து, அதற்கு ஒரு குங்குமப் பொட்டு வைத்து, அருகம்புல் வைத்து, வாசனை மிகுந்த ஒரு பூவையும் சூட்டி, பிள்ளையாரை அலங்கார படித்துவிடுங்கள். விநாயகருக்கு மிகவும் பிடித்தது கொழுக்கட்டை. விநாயகர் சதுர்த்தி அன்று கட்டாயம் எல்லோர் வீடுகளிலும் அது இருக்கும். கொழுக்கட்டையோடு சேர்த்து, உங்களால் என்ன பலகாரம் வைக்க முடியுமோ அதை விநாயகருக்கு நைவேத்தியமாக வைக்கலாம். நிறைய பலகாரங்களை வைத்து விநாயகரை வழிபாடு செய்தால், அது அவருக்கு அதிகப்படியான சந்தோஷத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகருக்கு தின்பண்டங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் அல்லவா.

manjal-pillaiyar

அடுத்ததாக, பரிகாரத்திற்கு ஒரு சதுர வடிவிலான மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணிக்குள் மஞ்சள் கிழங்கு 7, கொட்டைப் பாக்கு 7, அச்சுவெல்லம் 7, மஞ்சள் பூக்கள் 7, கொண்டைக்கடலை 70 கிராம், 1 ஒரு ரூபாய் நாணயங்கள் 7, இவை அனைத்தையும், அந்த மஞ்சள் துணியில் ஒன்றாக வைத்து, மஞ்சள் நூலில் முடிச்சுப் போட்டு கட்டி, அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு அருகில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையாருக்கும், இந்த முடிச்சு, இவை இரண்டிற்கும் சேர்ந்தாற்போல் ஒரு அகல் தீபத்தில், நெய் ஊற்றி, தீபம் ஏற்றப்பட வேண்டும். 48 நாட்களும் தீபம் ஏற்றி, அந்த மஞ்சள் பிள்ளையாரை வழிபாடு செய்து, உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்து, 48வது நாள், அந்த மஞ்சள் பிள்ளையாரையும், நீங்கள் கட்டி வைத்திருக்கும் அந்த முடிச்சையும், ஓடுகின்ற தண்ணீரில் விட்டு விட வேண்டும். மஞ்சள் பிள்ளையாரை மட்டும் உங்கள் கைகளால் கரைத்து, அதன் பின்பு ஆற்றில் விட்டு விடுங்கள்.

manjal-kizhangu

பொதுவாக, விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கக்கூடிய விநாயகரை மூன்றாவது நாளோ அல்லது ஒன்பதாவது நாள் தான், தண்ணீரில் கரைப்பார்கள். பரிகாரத்திற்கு நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையாரை, கட்டாயம் 48வது நாள் தான் கரைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்த பரிகாரத்தை செய்தால், அந்தப்பெண் மாதவிலக்கான நேரத்தில், அவர்கள் வீட்டில் இருக்கும் தாய், இந்த பரிகாரத்தை தொடரலாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பரிகாரம் 48 நாட்களுக்கு குறையக் கூடாது. 48 நாட்களும் அந்த மஞ்சள் விநாயகருக்கு ஒரு பழமாவது, நைவேத்தியமாக படைக்க வேண்டும். தினமும் நெய் தீபம் தான் ஏற்ற வேண்டும்.

marriage
Marriage matching

இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, அடுத்த 48 நாட்களுக்குள் உங்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும். சில பேருக்கு எல்லாம், இனி திருமணமே ஆகாது என்று, அப்படியே விட்டு விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கூட கட்டாயம் இந்த பரிகாரத்தை செய்தால் திருமணம் கைகூடி வரும். இந்த தம்பதியர் இனி செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று முடிவுகட்டி வைத்திருந்தாலும் கூட அவர்கள் கட்டாயம் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால்.

Hindu Marriage

திருமணமாகாத, ஆண் பெண்ணின் தாய் தந்தையரும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை வீட்டில் இருக்கக் கூடிய சந்தர்ப்பம், திருமணமாகாத ஆண் பெண்ணுக்கு இருந்தால், நீங்களே உங்கள் கைகளால், தீபமேற்றி வினாயகரை வழிபடுவது, பரிகாரத்தின் பலனை இன்னும் அதிகபடியாக சேர்க்கும் என்பதையும், இந்த இடத்தில் தெரிந்து கொள்ளுங்கள். தும்பிக்கை நாதனை நம்பிக்கையோடு வழிபட்டால் கட்டாயம் ஏமாற்றமில்லை என்று ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மாங்கல்ய தோஷம், இரு தார தோஷம் இருப்பவர்கள் உண்மையில் எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.