உங்களுடைய தலையெழுத்தை மாற்றும் திருநீரு! என்ன சொல்லி இட்டுக் கொள்ள வேண்டும்? உடம்பில் எந்த இடத்தில் எல்லாம் பூசிக் கொள்ள வேண்டும் தெரியுமா? அதனால் கிடைக்கும் பலன்கள் தான் என்ன?

thiruneer-sivan
- Advertisement -

ஒவ்வொருவரும் பிறக்கும் பொழுதே பல்வேறு விதமான தலை எழுத்துக்களை கொண்டு தான் பிறக்கின்றோம். ‘நீ என்ன வரம் வாங்கி வந்தாயோ! உன் தலையெழுத்து இப்படி இருக்கிறது!’ என்றெல்லாம் பலரும் தூற்ற கேள்விப்பட்டிருப்போம். ஒருவருடைய மோசமான தலையெழுத்தை கூட மாற்றி அமைக்க கூடிய வல்லமை திருநீற்றுக்கு உண்டு. திருநீறு வெறும் சாம்பல் மட்டுமல்ல! அது எம்பெருமான் ஈசனின் ஸ்வரூபம் ஆகும். திருநீற்றை சிவன் கோவிலில் இருந்து வீட்டுக்கு கொண்டு சென்றால், சிவன் சொத்தை எடுத்துச் செல்வதாக யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

viboothi

இது முற்றிலும் தவறான கூற்று. உண்மையில் சிவன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. இத்தகைய மகிமை வாய்ந்த திருநீரு பூசிக் கொள்ளும் பொழுது என்ன சொல்ல வேண்டும்? எப்படி பூச வேண்டும்? உடம்பில் எங்கெல்லாம் பூசிக் கொள்ளலாம்? பெண்களும் பூசலாமா? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

திருநீரை முறையாக இட்டுக் கொள்ளும் சிவ அடியார்களுக்கு நேர்மறையான எண்ணங்களும், ஒழுக்க நெறிகளும் இயல்பாகவே வந்து விடுகிறது. இன்னார்தான் தரித்துக் கொள்ள வேண்டும் என்கிற எந்த ஒரு வரைமுறையும் திருநீற்றுக்கு இல்லை. சிறு குழந்தை முதல் பெண்கள், பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் திருநீற்றை இட்டுக் கொள்ளலாம். தினமும் திருநீர் பூசி கொள்பவர்களுக்கு தலைவலி, தலைபாரம் என்பது ஏற்படாது.

viboothi

சாம்பலால் உருவாக்கப்பட்ட திருநீர், நெற்றியில் பூசிக் கொள்ளும் பொழுது கபாலத்தில் இருக்கும் நீர் உறிஞ்சப்பட்டு தலைபாரம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் தான் திருநீர் பூசி கொண்டால் தலைவலி என்பது வரவே வராது என்று கூறப்படுகிறது. தீட்டு நாட்களை தவிர மற்ற எல்லா நாட்களிலும் குளித்து முடித்தவுடன் திருநீறு அணிந்து கொள்ளலாம். இதனால் உங்களை அறியாமல் ஒழுக்க நெறியிலிருந்து தவறுவது தடுக்கப்படுகிறது.

- Advertisement -

திருநீறு அணியும் பொழுது மோதிர விரல், நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இந்த மூன்று விரல்களையும் சேர்த்துக் கொண்டு விபூதியை எடுத்து நெற்றியில் இடமிருந்து வலமாக பூசிக் கொள்ள வேண்டும். பூசும் பொழுது ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரம் சொல்லி திருநீரு இட்டுக் கொள்பவர்களுக்கு எந்த இடத்திலும் புகழும், மரியாதையும் உயரும். தோல்வி என்பது ஏற்படவே செய்யாது. வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள் தினந்தோறும் திருநீறு அணிந்து கொள்ளலாம்.

Thirumoolar

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை!!
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்!!
தங்கா வினைகளும் சாரும் சிவகதி!!
சிங்கார மான திருவடி சேர்வரே!!!

sivan

என்று திருமூலர் தன்னுடைய பாடலில் திருநீற்றைப் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறியுள்ளார். அவனின்றி அணுவும் அசையாது என்பது போல் சிவனின் அருள் பெற தினமும் 18 இடங்களில் திருநீறு பூசிக் கொள்ளலாம். அவையாவன? தலை நடுவில் (உச்சி), நெற்றி, மார்பு, தொப்புளுக்கு சற்று மேல், இடது தோள், வலது தோள், இடது கையின் நடுவில், வலது கையின் நடுவில், இடது மணிக்கட்டு, வலது மணிக்கட்டு, இடது இடுப்பு, வலது இடுப்பு, இடது கால் நடுவில், வலது கால் நடுவில், முதுகுக்குக் கீழ், கழுத்து, வலது காதில் ஒரு பொட்டு, இடது காதில் ஒரு பொட்டு. சிவன் கோவில் திருநீறு இருக்கும் வீட்டில் துஷ்ட சக்திகள் நுழையாது.

- Advertisement -