இந்த இலையை பூஜை அறையில், இப்படி வைத்து வேண்டினால், நீண்டநாள் நிறைவேறாத வேண்டுதலும், ஒரே நாளில் நிறைவேறும்.

amman

இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல்கள் உடனே பலிக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளது. நமக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டு நாம் எதையாவது இறைவனிடம் வேண்டி கேட்க வேண்டியது! ஆனால், அந்த நல்லது மூலம் நமக்கு எதிர்காலத்தில் கெடுதல் நடக்கும் என்பது நமக்கே தெரியாது அல்லவா? ஆனால் அது இறைவனுக்கு தெரியும். எதிர்காலத்தில் வரக்கூடிய கெடுதலை தடுப்பதற்கு, நம்முடைய வேண்டுதலை அந்த இறைவன் நிறைவேற்றாமல் இருப்பதும் ஒரு காரணம் தான். சில பேருக்கு இது புரிவதில்லை. நாம் கேட்ட வரம் இறைவனிடமிருந்து கிடைக்கவில்லை என்றதும், கோபத்தில் இறைவனை வஞ்சித்துக் கொண்டே இருப்பார்கள்.

chandika-devi-amman1

முக்காலத்தையும் அறிந்த அந்த ஆண்டவனுக்கு தெரியாதா? எந்த வரத்தை, எப்போது நமக்கு கொடுக்க வேண்டும் என்பது! சரி, இதற்காக வேண்டுதலை வைக்காமலும் நம்மால் இருக்க முடியாது. நம் வீட்டில் சில சுப காரியங்கள், நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்பதற்காகவும், நம்முடைய குழந்தைகள், நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சில பொதுப்படையான வேண்டுதலை இறைவனிடம் வைத்து தான் ஆக வேண்டும்.

அந்த வேண்டுதல்கள் கூடிய விரைவில் நிறைவேற வேண்டும் என்றால், நான் செய்த கர்ம வினைகளால் நமக்கு நடக்கக்கூடிய, நல்லது தடைபட்டுக் கொண்டே வந்தால், ஆன்மீக ரீதியாக எந்த முறையில் நாம் வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அந்த காலத்திலிருந்தே சில செடிகளுக்கு ஆன்மீக ரீதியான சக்திகள் அதிகம் உண்டு. அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் செடி தொட்டாசிணுங்கி செடி.

thotta-sinungi1

இந்த தொட்டாசிணுங்கி செடியை நம்முடைய வீட்டில் வைத்து வளர்த்தால் அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்த செடியை பற்றி நாம் அறிந்திராத ஒரு விஷயத்தை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம். காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு தொட்டாச்சிணுங்கி இலைகளை பறித்து வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பாக உங்களுடைய வீட்டில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்‌. பூஜை அறையில் இருக்கும் மின்விளக்குகளை அணைத்து விட வேண்டும். தீப ஒளி மட்டும் பிரகாசமாக எரியும். அந்த தீப ஒளியில் இந்த தொட்டாசிணுங்கியின் இலை தெரியவேண்டும். தீப ஒளியில் பிரகாசமாக உங்கள் கண்ணுக்குத் தெரியும் தொட்டாசிணிங்கி இலைகளை பார்த்து, உங்களது வேண்டுதல்களை தினசரி அந்த இறைவனிடம் சொல்லி வாருங்கள். ஒரே வேண்டுதலாக இருக்கட்டும். (பூஜையில் வைத்த பழைய தொட்டாச்சிணுங்கி இலைகளை எடுத்து கால் படாத இடங்களில் போட்டு விடுங்கள். தினமும் புதிய இலைகளைக் கொண்டு வந்து வைக்க வேண்டும். ஒரு சிறிய கிளையாக வையுங்கள். ஒவ்வொரு இலையாக தொட்டாசிணுங்கி இலைகளை பறிக்கக்கூடாது.)

thotta-sinungi

தொடர்ந்து 48 நாட்களும் தொட்டாசிணுங்கி பறித்து வந்து பூஜை அறையில் வைத்து இப்படியாக உங்களது வேண்டுதலை சொல்லி, ஏதாவது ஒரு உக்கிர தெய்வத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ‘ஓம் மஹா காளியே போற்றி!’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம் ‘ஓம் மகிஷாசுரமர்த்தினியே போற்றி!’ ‘ஓம் துர்க்கா தேவியே போற்றி!’ என்று எந்த அம்மன் தெய்வத்தின் பெயரை உச்சரித்தும் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.

Amman-deepam-1

தொட்டாச்சிணுங்கி செடி அந்த அம்மனின் சொரூபமாக சொல்லப்பட்டுள்ளது. காமவர்த்தினி என்ற பெயரும் இதற்கு உண்டு. துளசி வில்வம் போன்ற மகத்துவம் வாய்ந்த செடிகளின் வரிசையில் இதுவும் அடங்கும். மாதவிலக்கான சமயத்தில் பெண்கள் இந்த செடியை தொடுவது பாவமாகக் கருதப்படுகின்றது. இத்தனை மகத்துவம் கொண்ட இலையை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால், நிச்சயமாக பலநாள் கஷ்டங்கள் சில நாட்களில் தீருவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.