துளசியுடன் இந்த ஒரு செடியை சேர்த்து வளர்த்தால் குபேர யோகம் உண்டாகுமாம்! என்ன மரம் அது?

nelli-kuberan
- Advertisement -

பொதுவாக துளசி செடியை வீட்டில் வைத்திருந்தால் நமக்கு லட்சுமி கடாட்சம் பெருக சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் எளிதாக கிடைத்தாலும் இது ஒரு சஞ்சீவினி மூலிகையாக ஆன்மீகத்திலும், மருத்துவத்திலும் பார்க்கப்படுவதால் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை தடுக்கவும் துளசி செடியை வீட்டில் வளர்ப்பது உண்டு. துளசி வழிபாடு செய்து வருபவர்களுக்கு மாங்கல்ய பலம் நீடிக்கும் என்பதும் நம்பிக்கை. இத்தகைய விசேஷமான மகத்துவங்களை கொண்டுள்ள துளசி செடியுடன் இந்த மரத்தை வளர்த்தால் குபேர யோகம் நமக்கு உண்டாகும் என்கிறது சாஸ்திரங்கள். அது என்ன மரம்? என்பதை நீங்களும் அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

kuberan

செல்வாதிபதியாக இருக்கும் குபேரனுக்கு கூட ஒரு முறை அனைத்து செல்வங்களையும் இழந்து நிர்கதியாக நிற்கும் நிலை வந்ததாம். நாடு, நகரமெல்லாம் இழந்த குபேரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! அந்த சமயத்தில் அவர் தன்னுடைய இழந்த எல்லாவற்றையும் மீட்க அருள் பாலிக்குமாறு மகாவிஷ்ணுவிடம் வேண்ட மகாவிஷ்ணு கூறிய அற்புத ரகசியம் என்ன தெரியுமா?

- Advertisement -

அவர் குபேரனிடன் நெல்லி மரத்தை வீட்டில் வளர்த்து வர சொன்னார். நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. இம்மரத்தை வளர்த்து வருபவர்களுக்கு செல்வத்தில் குறைவிருக்காது. எத்தகைய பணக் கஷ்டமும் அவர்களுக்கு நெருங்குவதில்லை. அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும். அப்படியே குபேரனும் நெல்லி மரத்தை வளர்த்து இழந்த செல்வங்களையும், நாடு நகரங்களையும் திரும்பப் பெற்றார்.

karunthulasi2

எனவே நெல்லிமரம் கட்டாயம் எல்லோருடைய வீட்டிலும் வளர்ப்பது லட்சுமி கடாட்சத்தையும், செல்வ வளத்தையும் அதிகரிக்க செய்யும். துளசிக்கு இணையான நெல்லிச் செடியை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டம் ஆகும். துளசியை போலவே நெல்லியும் ஆன்மீகத்தில் மட்டுமல்லாமல் மருத்துவத்திலும் சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது ஆகும். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் அவர்களுக்கு எத்தகைய நோய்களும் நெருங்குவதில்லை என்கிறது மருத்துவம். ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லப்படும் இந்த நெல்லிக்கனி தினமும் ஒன்று சாப்பிட்டு, அதனை வளர்த்து லட்சுமி கடாட்சத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வகையில் இம்மரம் துளசிச் செடியுடன் இணைந்து வளர்க்கப்படும் பொழுது கூடுதல் பலன்களை கொடுக்கும். துளசி செடியுடன், நெல்லி மரத்தை வீட்டில் வளர்ப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். குபேரனுக்கு நெல்லி மரத்தால் தான் இழந்த எல்லாமே கிடைத்தது எனவே உங்களுக்கும் இழந்த சொத்துக்கள், இழந்த செல்வாக்கை மீண்டும் கிடைக்க வீட்டில் துளசி மற்றும் நெல்லி மரத்தை சேர்த்து வளர்த்து வரலாம்.

nelli-maram1

துளசியை வடமேற்கு அல்லது தென்மேற்கு பகுதியில் வளர்க்க கூறுவர். குறிப்பாக தென்மேற்கு பகுதியில் வைத்து துளசி செடியை வளர்த்து வந்தால் மிகுந்த செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது வாஸ்து ரீதியான பரிகாரமாகும். அதே போல நெல்லி மரத்தையும் தென்மேற்கில் வைத்து வளர்க்க எல்லா வகையான துன்பங்களும் நம்மை விட்டு நீங்கிப் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

இழந்த சொத்துக்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் மேம்படும். மேலும் தொழில் விருத்தி, வியாபார விருத்தி, வருமான உயர்வு போன்றவையும் ஏற்படும். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் வீட்டில் நெல்லி மரத்தை வைத்து வளர்த்து பாருங்கள். அந்த நஷ்டத்தை மீண்டும் எளிதாக மீட்டு எடுக்கலாம். எனவே துளசிச் செடி மற்றும் நெல்லி மரம் இந்த இரண்டும் ஒரு வீட்டில் இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்டம் தான்.

- Advertisement -