சகல பிரச்சனைகள் தீர பைரவர் வழிபாடு

bhairavar-dheepam
- Advertisement -

இன்று பைரவர் வழிபாடு குறித்து பெருமளவு அனைவருக்கும் தெரிந்திருக்க தான் செய்கிறது. பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி தான். இதில் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி என்ற இரண்டு அஷ்டமியிலும் பைரவரை நினைத்து வழிபடும் போது நம்முடைய துன்பங்கள் நீங்கும். இந்த பைரவரை நம்முடைய பிரச்சனைகள் தீர அதுவும் நம் வீட்டிலே எப்படி வழிபட வேண்டும் என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

துன்பம் தீர பைரவர் வழிபாடு

நம்முடைய சகல விதமான துன்பங்கள் தீரவும் பைரவரை வழிபடலாம். பைரவரை வழிபடுவதில் பலரும் பல முறைகளை பின்பற்றி வந்தாலும் நம் வீட்டில் அவரை எளிமையாக எப்படி வழிபட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை நீங்கள் அஷ்டமி அன்று தான் செய்ய வேண்டும். அப்போது தான் இதற்கு அதிக பலன் கிடைக்கும்

- Advertisement -

அஷ்டமியில் மாலை வேளையில் பைரவரை வழிபடுவது மிகவும் சிறந்தது. அஷ்டமி அன்று மாலை 6:00 மணிக்கு மேல் உங்கள் பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இதற்கு ஒரு சிகப்பு நிற துணியில் கொஞ்சமாக மிளகை சேர்த்து சிறிய முட்டை போல் கட்டிக் கொள்ளுங்கள். இதற்கு மிளகு எண்ணிக்கை கிடையாது கொஞ்சம் கைகளால் எடுத்து போடுங்கள் போதும்.

அடுத்து ஒரு அகல் விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி இந்த மிளகு மூட்டையை அதில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது உங்கள் பூஜை அறையில் கிழக்கிலிருந்து வடக்கு பார்த்தவாறு எரிய வேண்டும். இந்த தீபம் எரியும் போது நீங்களும் வடக்கு நோக்கி அமர்ந்து பைரவரை மனதார நினைத்து ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு கண்களை திறந்து தீப ஒளியை மூன்று நிமிடம் பார்த்தவாறு உங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார உறுதி வேண்டிக் கொள்ளுங்கள் இவ்வளவு தான் வழிபாடு. இந்த வழிபாடு முடிந்ததும் அடுத்த நாள் விளக்கில் இருக்கும் மிளகை எடுத்து காய வைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதை நீங்கள் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது அதில் சேர்த்து போடலாம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறி விடும். இந்த தீப வழிபாடு நீங்கள் தொடர்ந்து செய்து வரும் போது எந்த விதமான துன்பமும் உங்களை நெருங்காது. கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி, தீய சக்திகள் பண பிரச்சனை இவை அனைத்தும் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

இதையும் படிக்கலாமே: தீராத கஷ்டங்கள் தீர விநாயகர் வழிபாடு

சிவபெருமானின் செரூபமான பைரவரை நினைத்து வீட்டில் இப்படி எளிமையாக வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியத்தையும் பெற்று நிம்மதியாக வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை அடையுங்கள்.

- Advertisement -