உங்கள் வீட்டிற்கு வரப்போகும் மருமகள், நல்ல மருமகளாக வரவேண்டும் என்றால் என்ன செய்வது?

family-deepam

பெண்களாக பிறவி எடுத்தவர்கள் எல்லோருமே, நல்லவர்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மகனை பெற்று வைத்திருக்கும் அம்மாக்கள், எல்லாருக்குமே இருக்கக்கூடிய ஒரு வேண்டுதல் தான் இது. ‘அவர்களுடைய வீட்டிற்கு வரப்போகும் மருமகள் நல்ல மருமகளாக இருக்க வேண்டும்.’ நல்ல மருமகள் என்றால் எப்படி இருக்க வேண்டும்? முடிந்தவரை எல்லோரையும் அனுசரித்து செல்பவராக இருக்கவேண்டும். பெரியவர்களை எதிர்த்துப் பேசக் கூடாது. குறிப்பாக மாமனார் மாமியாரை அனுசரித்து, வீட்டையும் நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று சிலர் எண்ணுவார்கள்.

happy-family

சிலர் பார்ப்பதற்கு அழகு குறைவாக இருந்தாலும், அறிவாற்றல் நிரம்பிய, குடும்பத்தை நிறைவான முறையில் வழிநடத்திச் செல்லக்கூடிய பெண், மருமகளாக கிடைத்தால் கூட போதும் என்று நினைப்பார்கள். அழகு என்பது வெளித் தோற்றத்தில் இல்லை. மன சுத்தம், கை சுத்தம் இருந்தால் மட்டுமே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி. உங்கள் வீட்டிற்கும் இப்படிப்பட்ட குணாதிசயங்கள் பொருந்திய அழகான, அறிவான மருமகளை பெற வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

மகனைப் பெற்று வைத்திருக்கும் தாய், தன்னுடைய குடும்பத்திற்கு நல்ல மருமகள் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, வாரந்தோறும் வரும் திங்கட் கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, வழிபட வேண்டும். முடிந்தால் உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ, விநாயகருக்கு வஸ்திர தானம் செய்யலாம். விநாயகருக்கு வேட்டி கட்டுவார்கள் அல்லவா? அந்த வேட்டியை வாங்கி தானமாக கொடுத்து வரலாம். அதோடு ஒரு எருக்கம்பூ மாலையையும் சாத்தி, உங்கள் வீட்டிற்கு நல்ல மருமகள் வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

vinayagar

உங்களுடைய வீட்டிலேயே வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று, சிறிதளவு சந்தனகட்டையை எரித்து, அதில் கொஞ்சம் பொறி, (மீனுக்கு போடும் பொறி இருக்கிறது அல்லவா) அதை நெருப்பில் இடவேண்டும். சாம்பிராணி தூபம் போடுவது போல தான். சந்தன கட்டையை சிறு சிறு துண்டுகளாக வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு கற்பூரம் போட்டு எரித்து, சின்ன யாகம் வளர்ப்பது போல தான், சந்தன கட்டையை எரித்த, அந்த நெருப்பில், பொறியை போட்டீர்கள் என்றால், அதிலிருந்து வரும் வாசம், உங்கள் வீடு முழுவதும் பரவும்.

- Advertisement -

இந்த குட்டி யாகத்தை, உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்ய வேண்டும். குறிப்பாக விநாயகர் படத்திற்கு முன்பு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அதன் பின்பு இந்த பரிகாரத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் செய்துவர வேண்டும். இத்தனை வெள்ளிக்கிழமை தான், இந்த யாகத்தை செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

sandil-wolld

உங்களால் எப்போதெல்லாம் இந்த யாகத்தை, உங்கள் வீட்டில் போட முடியுமோ, வெள்ளிக்கிழமைகளில் நீங்களே போட்டுக்கொள்ளலாம். பிராமணரை கூட்டி வந்து தான் ஹோமம் நடத்த வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. வீடு முழுவதும் கூட காட்ட வேண்டாம். விநாயகரின் முன்பு வைத்து விடுங்கள் அவ்வளவுதான். அந்த வாசம் உங்கள் வீடு முழுவதும் பரவியிருக்கும்.

pori

உங்கள் மனதில் இருக்கும், ‘உங்களுக்கு வரப்போகும் மருமகள், நல்ல மருமகளாக வரவேண்டும் என்ற வேண்டுதலை’ மட்டும் விநாயகரின் முன்பு வைத்து, இரு கை கூப்பி, கும்பிட்டு வந்தாலே போதும். கட்டாயம் உங்கள் பையனுக்கு நல்ல மனைவி கிடைப்பாங்க! உங்கள் குடும்பத்திற்கு நல்ல மருமகள் கிடைப்பாங்க! என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் மட்டும் முயற்சி செய்து பாருங்கள் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டிலேயே இஞ்சி வளர்க்கணும்னு ஆசை உங்களுக்கு இருக்கா? அப்படின்னா 5 நிமிஷம் இத படிச்சு பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vinayagar Vazhipadu. vinayagar vazhipadu in tamil. vinayagar vazhipadu murai in tamil. To get Good Daughter in Low