எளிதாக உடல் எடை குறைய இது ஒரு ஸ்பூன் வாரம் ஒருமுறை எடுத்தால் போதும் சிக்கென்று அழகாக மாறிவிடுவீர்கள்

saliya
- Advertisement -

உடல் எடை அதிகரிப்பு என்பது இப்பொழுது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. இன்பமாக வாழ நினைப்பவர்கள் எதிலும் கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை கூடி அவஸ்தைப் படுகிறார்கள். இதனால் பலவிதமான நோய்கள் உடலை தாக்குதல் செய்கின்றன. அது மட்டுமல்லாமல் உடலிற்கு முழுவதுமாக அசைவு கொடுக்காமல் ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் சீக்கிரத்தில் உடல் எடை கூடி சிரமப்படுபவர்களும் உண்டு. இவ்வாறு உடல் எடை கூடி மறுபடியும் உடல் எடையை குறைக்க மிகவும் துன்பப் படுபவர்களும் இருக்கிறார்கள். எனவே எப்பொழுதும் உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் அனைத்து வியாதிகளும் நம்மை எளிதாக ஆக்கிரமித்துக் கொள்ளும். எனவே உடல் எடை அதிகரிப்பில் இருந்து விடுபட, உடல் எடையை குறைய இந்த ஒரு பொருள் வைத்து சுவையான பாயாசம் செய்து சாப்பிடுங்கள். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அயன் சத்து அதிகரிக்கிறது. கால்சியம் குறைபாடு குறைகிறது. முடி நன்றாக வளரும். முகம் பளிச்சென்று இருக்கும். உடல் எடை குறையும். வாருங்கள் இந்த உணவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சாலியா விதை – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பால் – அரை லிட்டர், தாமரை விதை – அரை கப், பேரீச்சம்பழம் – ஒரு கப், பாதாம் பருப்பு – கால் கப், முந்திரி பருப்பு – கால் கப், தேங்காய் – 5 சில்லு, நாட்டுச் சர்க்கரை – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இந்த உணவை தயார் செய்வதற்கு முதல் நாள் இரவே 3 ஸ்பூன் சாலியா விதையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மறுநாள் காலை அந்த விதை நன்றாக ஊறி ஜெல் பதத்திற்கு மாறிவிடும்.

பின்னர் அடுப்பின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து, அரை கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் அதில் அரை லிட்டர் பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விடவேண்டும். பால் சூடாகும் நேரத்தில் இந்த பாயாசத்திற்கு தேவையான பவுடரை தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து அதில் அரை கப் தாமரை விதை மற்றும் 5சி தேங்காயை பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும் பிறகு இதனுடன் கால் கப் பாதாம் பருப்பு கால் கப் முந்திரிப்பருப்பு சேர்த்து அவற்றையும் வறுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்.

பிறகு பேரிச்சம் பழங்களை விதை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொண்டு, அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவற்றுடன் வறுத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து, அதனுடன் 2 ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து, அனைத்தையும் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பால் சூடானதும் அதில் ஊறிய சாலியா விதைகளை சேர்த்து, நன்றாகக் கொதி வந்ததும், அதனுடன் அரைத்து வைத்துள்ள இந்த பவுடரையும் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். இவற்றுடன் நிறத்திற்காக அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான சானியா பாயாசம் தயாராகிவிட்டது. இதனை வாரம் ஒருமுறை உணவாக எடுத்துக் கொள்ள உடல் எடை மளமளவென்று குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -