வண்டி கடையில் இட்லிக்கு தொட்டுக் கொள்ள கொடுக்கும் காரச் சட்னி இப்படித் தான் வீட்டிலும் செய்யனுமா? சுவையான வண்டி கடை காரச் சட்னி எப்படி செய்வது?

vengaya-chutney
- Advertisement -

வீட்டில் என்னதான் விதவிதமாக சட்னி வகைகள் வைத்து கொடுத்தாலும் வண்டியில் கொடுக்கும் இந்த கார சட்னிக்கு ஈடு இணையே இல்லை. நாம் செய்தால் மட்டும் கார சட்னி சுவையாக இப்படி வருவதில்லையே? என்று யோசிப்பவர்களுக்கு இந்த சட்னி ரெசிபி ரொம்பவே பயனுள்ளதாக இருக்க போகிறது. சுவையான வண்டி கடை கார சட்னி, சின்ன வெங்காயம் கொண்டு செய்தால் இன்னும் அருமையாக இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை இனி இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

வண்டிகடை கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – ஐந்து, காஷ்மீரி மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 30, பூண்டு பல் – 10, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

வண்டிகடை காரச் சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கார சட்னிக்கு சின்ன வெங்காயம் அதிகமாக தேவை. சின்ன வெங்காயம் இல்லை என்றால் 2 பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் சிவக்க வறுபட்டதும் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாய் நிறத்திற்காக சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் இல்லை என்றால் பரவாயில்லை விட்டுவிடலாம். பின்னர் நீங்கள் எடுத்து வைத்துள்ள வெங்காய துண்டுகளை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

- Advertisement -

இந்த சட்னிக்கு தக்காளி எதுவும் சேர்க்கத் தேவையில்லை எனவே வெங்காயத்தை மிதமான தீயில் வைத்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் 10 பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யப்படும் இந்த சட்னி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. நன்கு பூண்டு வாசனை போக வதக்கிக் கொள்ளுங்கள். ஓரளவுக்கு நன்கு வதங்கியதும் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடுங்கள்.

அதன் பின்னர் இறுதியாக கொஞ்சம் கொத்தமல்லி தழையை கழுவி சுத்தம் செய்து நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். கொத்தமல்லி அதிகம் வதங்கி விடக்கூடாது. லேசாக வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய இந்த பொருட்களை சேர்த்து தேவையான உப்பு போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மணக்க மணக்க ஆரோக்கியம் மிகுந்த இந்த கார சட்னிக்கு தாளிக்க கூட தேவையில்லை அப்படியே தொட்டுக் கொண்டு சாப்பிடலாம், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -