இப்படி ஒரு சட்னியை இதுவரைக்கும் உங்க வாழ்நாளில் இட்லிக்கு தொட்டு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. காரம் உச்சந்தலைக்கு ஏறும் அளவுக்கு நச்சுன்னு ஒரு சட்னி.

kara chutney
- Advertisement -

சுட சுட இட்லிக்கு தூக்கலான காரத்தொடு சுலபமாக ஒரு சைடிஷ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், கட்டாயமாக இந்த சட்னியை தான் செய்ய வேண்டும். அதுவும் இந்த குளிர் சமயத்தில் லேசான மழை சாரல் சமையத்தில், காலையில் சுடச்சுட ஆவி பறக்க இட்லிக்கு இந்த சட்னியை தொட்டு சாப்பிட்டால் அடடா சொல்வதற்கு வார்த்தையே இல்லை. எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக.

வெங்காய கார சட்னி செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு 1 ஸ்பூன் போட்டு படபடவென பொரிய விடுங்கள். அதன் பின்பு கடலைப்பருப்பு 2 ஸ்பூன் போட்டு லேசாக வறுத்து, இது கூடவே வர மிளகாய் 10 போட்டு வறுக்க வேண்டும். கடலைப்பருப்பு பாதி சிவந்து வந்தவுடன், வர மல்லி 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, போட்டு வதக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். கடாயில் இருக்கும் பொருட்கள் தீயக் கூடாது.

- Advertisement -

அதன் பின்பு நறுக்கிய பெரிய வெங்காயம் 2, நெல்லிக்காய் அளவு புளி, தோல் உரித்த பூண்டு பல் 4, போட்டு மீண்டும் எல்லா பொருட்களையும் வதக்குங்கள். வெங்காயம் பச்சை வாடை நீங்கி வதங்கி வர வேண்டும். 4 லிருந்து 5 நிமிடங்கள் மிதமான தீயிலேயே வெங்காயத்தை வதக்கி விட்டு இறுதியாக இந்த சட்னிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள்.

வதக்கிய பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீராக அரைக்க வேண்டாம். கொஞ்சம் திக்காக நைசாக அரைத்தால் சூப்பரான காரசாரமான வெங்காய கார சட்னி தயார். இதற்கு பெரும்பாலும் தாளிப்பு தேவைப்படாது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து இந்த சட்னியில் கொட்டி பரிமாறலாம்.

- Advertisement -

சுட சுட இட்லி மட்டுமல்ல, கல் தோசை, பணியாரம், இவைகளுக்கு தொட்டு சாப்பிடவும் இந்த சட்னி அருமையாக இருக்கும். குறிப்பாக ரவா இட்லி, அவல் இட்லி என்று மாவு புளிக்காமல் இட்லி செய்வோம் அல்லவா அப்படிப்பட்ட ரெசிபிகளுக்கு இந்த சட்னி சூப்பரான சைடு டிஷ்.

இதையும் படிக்கலாமே: சுவையான காரசாரமான பூண்டு தொக்கு 15 நிமிடத்தில் இப்படி செஞ்சா இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக்க அடிச்சிக்கவே முடியாதே!

மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. வர மல்லி சேர்த்து இந்த வெங்காய கார சட்னியை செய்யும் போது, அதில் ஒரு விதமான வாசமும் ருசியும் நமக்கு கிடைக்கும். இந்த சட்னிக்கு காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும். காரம் குறைவாக வைத்தால் சட்னியில் இனிப்பு சுவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -