இந்த தீபத்தை ஏற்றும்போதே உங்களுடைய கஷ்டம் நெருப்போடு, நெருப்பாக சேர்ந்து பொசுங்கி விடும். ஒரு நொடியில் உங்கள் கஷ்டத்தைப் போக்கக்கூடிய சக்தி இந்த தீபத்திற்கு உண்டு.

deepam10
- Advertisement -

தீராத மன கஷ்டத்தால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருபவர்களுக்கு கூட, இந்த பரிகாரம் ஒரு நல்ல பலனைக் கொடுக்கும் என்று சொல்லலாம். வெண்கடுகை பற்றி நாம் எல்லோரும் நிறைய கேள்வி பட்டிருப்போம். அந்த வெண்கடுகை நம் வீட்டில் முறைப்படி எப்படி தீபமேற்றினால், அந்த வெண்கடுகு, எப்படி தீபத்தில் எரிகின்றதோ, அதே போல உங்களுடைய கஷ்டமும் பொசுங்கிப் போய்விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அற்புதம் வாய்ந்த இந்த வெண்கடுகை உங்களுடைய வீட்டில் எப்படி ஏற்ற வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

venkadugu

தெய்வ சக்தி நிரம்பிய வெண்கடுகு எப்போதும் நம் வீட்டில் இருப்பது நல்லது. சாம்பிராணி தூபம் போடும் போது, கொஞ்சம் வென்கடுகு தூபம் போடலாம் என்பதும், நம் வீட்டிற்கு நன்மையைத் தரக்கூடியதுதான். இந்த வெண்கடுகை வைத்து நம் கஷ்டத்தை பொசுக்க வேண்டும் என்றால், அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது?

- Advertisement -

முதலில் ஒரு ஸ்பூன் அளவு வெண்கடுகை உங்கள் உள்ளங்கைகளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை உங்களது தலையை மூன்று முறை வலப்புறமாக மட்டும் சுற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பாக சதுர வடிவில் இருக்கும் வெள்ளை நிறத் துணியில் போட்டு, அதன் உள்ளே சுவாமிக்கு ஏற்றும் சாதாரண கற்பூரம் 2 சிட்டிகையை வைத்து, அந்த வெள்ளைத் துணியை சிறிய முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும்.

el deepam

உங்கள் வீட்டிற்கு வெளிப்பக்கத்தில், உங்கள் நில வாசல் படிக்கு வெளியில், தரையில் கொஞ்சமாக 2 இனுக்கு வேப்பிலைகளை போட்டு, அதன் மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த முடிச்சை அந்த அகல் தீபத்தை வைத்து ஏற்றி விடுங்கள். இந்த தீபத்தை ஏற்றும்போது உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிட வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முக்கியமான குறிப்பு என்னவென்றால், இந்த தீபம் எரிந்து முடியும் வரை நீங்கள் அந்த நெருப்பை பார்த்துக் கொண்டு, அந்த இடத்திலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பு, உங்களது மனசு லேசான மாதிரி உங்களுக்கே ஒரு எண்ணம் தோன்றும் பாருங்கள்! அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. பரிகாரத்தை செய்வதற்கு முன்பு குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

milagu-deepam

நில வாசப்படிக்கு வெளியில் ஏற முடியாதவர்கள், பின்பக்கம் இடம் இருந்தால் அங்கே ஏற்றலாம். மொட்டை மாடியில் இடமிருந்தால் அங்கேயும் ஏற்றலாம். வீட்டிற்குள் மட்டும் ஏற்றக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். மாதந்தோறும் வரும் அமாவாசை திதியில் இந்த பரிகாரத்தை செய்வது பலமடங்கு நன்மையை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமே கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள் எப்போது வேண்டும் என்றாலும் இந்த தீபத்தை ஏற்றுங்கள்.

- Advertisement -

deepam

உங்களுக்கு பிரச்சனை இருந்தால், உங்களது தலையை மூன்று முறை வெண்கடுகை வைத்து சுற்றிக் கொள்ளுங்கள். அல்லது உங்களுடைய வீட்டில் வேறு யாருக்காவது பிரச்சனை இருந்தாலும் சரி, அல்லது குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சனை இருந்து அழுது கொண்டே இருந்தாலும் சரி, அவர்களுடைய தலையை மூன்று முறை வெண்கடுகை கொண்டு சுற்றி விட்டு, கூட வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி இந்த பரிகாரத்தை செய்யலாம். திருஷ்டி கழிப்பதற்கு கூட இந்த முறையை பின்பற்றலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
வீட்டில் தவறியும் செய்யக்கூடாத 1 தவறு! இந்த தவறு மகாலட்சுமி வரவை தடை செய்யும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -