வெற்றியை நமக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள, ஏமாற்றத்தை எட்டாத தூரத்திற்கு தள்ளிவிட, வெறும் 1 எலுமிச்சம் பழம் போதும்.

pooja-room-lemon

நிறைய பேருக்கு தங்களுடைய வாழ்க்கையில் வெற்றி என்பது கிடைக்கும். ஆனால், அந்த வெற்றியை அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக அந்த வெற்றியை, விதி தட்டிப் பறித்துக் கொள்ளும். எடுத்துக்காட்டிற்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மூன்று மாதங்கள் எதிர்பாராத லாபத்தை கொட்டிக் கொடுத்த சொந்தத் தொழில், நான்காவது மாதம் ஏதாவது ஒரு சிறிய காரணத்தினால் பெரிய நஷ்டத்தை சந்தித்திருக்கும். மனதிற்குப் பிடித்த வேலை கிடைத்திருக்கும். அந்த வேலையை நிரந்தரமாக நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியாது.

success

இப்படிப்பட்ட பிரச்சினைகள் நமக்கு ஏற்படுவதற்கு என்ன காரணம்? நம்மை சுற்றி இருக்கும் கண்ணுக்குத் தெரிந்த, கண்ணுக்கு தெரியாத எதிரிகள் தான். குறைந்த நாட்களில் பெரிய வெற்றியை நாம் அடைந்தால், நம்மை அறியாமலேயே நமக்கு எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடுகின்றது. அந்த எதிரிகளின் கண் திருஷ்டியை உடைத்தெறிய தாந்திரீக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எண்ணம் போல வாழ்க்கை என்று சொல்லுவார்கள். நாம் எதை நினைக்கின்றோமோ, அதுதான் நமக்கு நடக்கும். முடிந்தவரை அடுத்தவர்களுக்கு நன்மையையே நினைத்துப் பழகுங்கள். நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு இதுவே முதல் படி. சரி பரிகாரத்தை பார்த்து விடுவோம். முதலில் பித்தளை சொம்பு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் உள்ளே சுத்தமான தண்ணீரை நிரப்பி விடுங்கள்.

lemon

அந்த தண்ணீரில் சிவப்பு சந்தனம் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன், துளசி இலைகள் 2, வில்வ இலைகள் 2, வேப்ப இலை 1 இனுக்கு, இவைகளைப் போட்டு முதலில் நன்றாக கலந்துவிட வேண்டும். அதன் பின்பாக ஒரு எலுமிச்சம் பழத்தை உங்களது உள்ளங்கையில் எடுத்து வைத்துக்கொண்டு, குலதெய்வத்தை முதலில் மனதார வேண்டிக் கொண்டு, அதன் பின்பாக உங்களுக்கு இருக்கக்கூடிய எதிரி தொல்லைகள் கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றல்கள், உங்களுடைய வெற்றியை தடைப்படுத்தக்கூடிய எல்லா கஷ்டங்களும், எல்லா எதிர்ப்புகளும், உங்களை விட்டு விலகியே இருக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் கண்திருஷ்டி ஆக இருந்தாலும் சரி, அடுத்தவர்களுடைய வயிற்றெரிச்சலாக இருந்தாலும் சரி, கண்ணுக்கு தெரியாத வேறு எந்த எதிர்மறை ஆற்றல் ஆக இருந்தாலும் சரி அது கண்ணுக்கு தெரியாமல் அழிந்து போக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, அந்த எலுமிச்சம் பழத்தை, தயாராக இருக்கும் சொம்பு தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள்.

sad-lemon

பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் இந்த எலுமிச்சம்பழம் உங்கள் வீட்டுப் பூஜை அறையிலேயே இருக்கட்டும். அந்த தண்ணீரிலேயே இருக்கட்டும். அதன் பின்பு அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி உங்களுடைய நில வாசப்படிக்கு வெளியே சென்று, இரண்டு பக்கமும் பிரிந்து அந்த தோலை இடதுபக்கம் ஒரு தோல், வலதுபக்கம் ஒரு தோலாகவும் போட்டுவிடுங்கள். அவ்வளவு தான்.

vinayagar-abishegam

உங்களை பிடித்த கஷ்டம் உங்களை விட்டு நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த பரிகாரத்தை செய்து விட்டு ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று ஒரு தேங்காயை வாங்கி உங்களுடைய கஷ்டங்கள் சிதற வேண்டும் என்று, அந்தத் தேங்காயை சிதறு தேங்காயாக விட்டுவிட வேண்டும். இப்படியாக மாதம் ஒருமுறை வரக்கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்தால் கூட போதும். உங்களுக்கு வரும் வெற்றிக்கு எந்த ஒரு பாதகமும் ஏற்படாது. வாழ்க்கையில் சாதகமான பலன்களை அள்ளித் தர கூடிய பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.