உங்களை வீழ்த்த நினைப்பவர்கள் முன் உயர்ந்து காட்ட வெற்றியைத் தரும் வெற்றிலையை இப்படி செய்யுங்கள்!

hanuman-vetrilai
- Advertisement -

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான வெற்றியை நோக்கிய பயணத்தில் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப ஏதாவது ஒரு விஷயத்தில் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள். இதற்கு இடையே உடன் இருப்பவர்கள் நம்மை வீழ்த்தவும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை தடைகளையும் தாண்டி அவர்கள் முன் உயர்ந்து காட்ட, வெற்றியை தரும் வெற்றிலையை என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஹனுமன் கடவுளின் அம்சமாக இருந்தாலும், அவர் சிறந்த ஸ்ரீ ராமரின் பக்தராகவே கை கூப்பி எப்பொழுதும் காட்சி கொடுக்கின்றார். இவரிடம் வேண்டி வணங்கினால் எந்த ஒரு விஷயமும் தோல்வி அடைவதே கிடையாது. அனைத்திலும் ஜெயம் உண்டாக சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடலாம்.

- Advertisement -

எந்த ஒரு மங்களகரமான விஷயத்திற்கும் வெற்றிலை, பூ, பாக்கு, பழம் போன்றவற்றை வைத்து வழிபாடுகள் செய்வது உண்டு. மங்களம் தரும் இந்த வெற்றிலையை மாலையாக கோர்த்து அதிகம் அணிவிப்பது அனுமனுக்கு தான்.

ராமனை பிரிந்த சீதையைத் தேடி பல காலங்கள் அலைந்து கடைசியில் சீதையை கண்டுபிடித்த அனுமனுக்கு ஒரே மகிழ்ச்சி! ராமன் கொடுத்த மோதிரத்தை சீதையிடம் காண்பித்த போது, சீதையின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இதனால் அனுமனுக்கு ஆசீர்வாதம் கொடுக்க நினைத்த சீதைக்கு பூக்கள் எதுவும் கிடைக்கவில்லை. அருகில் இருக்கும் வெற்றிலை இலையை பறித்து ஹனுமனை ஆசீர்வாதம் செய்தார். இதனால் தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றப்படுகிறது என்று ஆச்சரிய பெருமக்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

இவருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுபவர்களுக்கு எத்தகைய தோல்வியும் நெருங்குவதில்லை. முக்கியமான விஷயங்கள், ஜெயம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக்கூடிய காரியங்கள் எதுவாயினும் அனுமனை வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது விசேஷமானது. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றும் பொழுது இரட்டைப்படை எண்ணிக்கையில் வெற்றிலையை கோர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல பாக்கு வைக்கும் பொழுது ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் பாக்கு வைக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

எந்த ஒரு விஷயத்தில் நீங்கள் வெற்றியை அடைய வேண்டும் என்றாலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு இரட்டைப்படை எண்ணிக்கையில் வெற்றிலையை ஆஞ்சநேயரின் உயரத்திற்கு ஏற்ப மாலையாக கோர்த்து அணிவிக்க சொல்லுங்கள். இது போல தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வர வேண்டும். இப்படி வழிபட்டு வந்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். எந்த விதமான தடைகளும் இன்றி நீங்கள் வெற்றியை அடையலாம்.

இதையும் படிக்கலாமே:
வரவேற்பறையில் இந்த 1 பொருளை வைத்து விட்டால், வீட்டில் கொழுந்துவிட்டு எரிகின்ற பிரச்சனையும் சாந்தமாய் அடங்கும்.

ஆஞ்சநேயருக்கு வடை மாலை கூட சாற்றி வழிபடுவார்கள். சுப காரியங்களில் தடைகள் இருப்பவர்கள் ஆஞ்சநேயருக்கு வடைகளை மாலையாக கோர்த்து அணிவிக்கலாம். வடையை மாலையாக கோர்க்கும் பொழுதும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் கோர்க்காமல் இரட்டைப்படை எண்ணிக்கையில் கோர்த்து அணிவிக்க வேண்டும். ஓட்டை வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். ஸ்ரீ ராமஜெயம் என்னும் மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுதி மாலையாக கோர்த்தும் அணிவிப்பார்கள். இது போன்ற எளிய அனுமன் வழிபாடுகள் செய்வதன் மூலம் நம்முடைய வெற்றி மிகவும் எளிதாகிறது.

- Advertisement -