வீட்டில் காரணமே இல்லாமல் சண்டை சச்சரவுகள் அதிகம் வர இந்த 4 விஷயங்களும் காரணமாக இருக்க போகிறது பார்த்துக் கொள்ளுங்கள்!

fight-fan-dust
- Advertisement -

பொதுவாக வீடு என்று எடுத்துக் கொண்டால் அதில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் என்பது இருக்க தான் செய்யும். எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்திருக்கிறது? ஆனால் அது சரியான காரணங்களுடன் ஏற்படக்கூடிய சண்டைகள் ஆக இருந்தால் பரவாயில்லை. எந்த காரணமும் இல்லாமல் அடிக்கடி சண்டை வருகிறது என்றால் அங்கு ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தமாகும். இதைத்தான் தரித்திரம் என்பார்கள். இதற்கு இவையெல்லாம் கூட காரணமாக இருக்கலாம் என்கிறது சாஸ்திரம்! அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிக்கலாம்.

fight2

பொதுவாக வீட்டையும், வீட்டை சுற்றியும் பிரபஞ்சம் முழுவதும் எதிர்மறை ஆற்றல்களும், நல்ல ஆற்றல்களும் கலந்து தான் இருக்கும். இதிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வர விடுவதும், தடுக்க செய்வதும் நம் கையில் தான் உள்ளது. வீட்டை ஒட்டியிருக்கும் சுவர்களுக்கு அருகில் குப்பை கூழங்களாக இருந்தால் நிச்சயம் அந்த எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

உங்கள் வீட்டிலிருந்து குப்பை கொட்டும் இடம் குறைந்தது இரண்டு அடிக்கு தள்ளியாவது இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் சுவற்றுக்கு அருகிலேயே குப்பையை கொட்டி வைத்தால் நிச்சயம் அங்கு தரித்திரம் தாண்டவமாடும், அது வீட்டிற்குள்ளும் குடும்பத்திற்கும், எதிர்மறை ஆற்றல்களை பிரதிபலிக்கச் செய்யும், அதன் விளைவாக குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன.

bero

மூளை முடுக்குகளில் சேரும் அழுக்குகள், தூசிகள் கூட எதிர்மறை ஆற்றல்களை வெளிவிடும் தன்மை உள்ளது. சிலருக்கு தூசியை கண்டாலே அலர்ஜி வந்து விடும். பீரோ, டியூப் லைட், ஃபேன், செல்ஃப் போன்ற இடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ தூசிகள் அட்டை அடையாக ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்திருப்போம். நம் கைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதாலும், சுத்தம் செய்ய சுலபமாக இல்லாததாலும், அதனை நாம் அப்படியே விட்டுவிடுகிறோம். ஆனால் அதன் மூலம் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் ஊடுருவும், எனவே அவற்றை அடிக்கடி சுத்தம் செய்து வைத்துக் கொள்வது பிரச்சனைகள் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

- Advertisement -

பேசும் வார்த்தைகள் கூட எதிர்மறை விளைவுகளையும், ஆற்றல்களையும் வெளியிடும். நாகரீகமற்ற வார்த்தைகளையும், ஒருவர் மனம் புண்படும் படியான வார்த்தைகளையும் அள்ளி வீசும் பொழுது அந்த வீட்டில் தெய்வ கடாட்சம் குறையும். அப்போது இயல்பாகவே எதிர்மறை ஆற்றல் குடிகொள்ளும். இது போன்ற சமயங்களில் அடிக்கடி கணவன் மனைவி பிரச்சனை ஏற்படுவது என்பது இயல்பானதாகி விடும். பேசும் பேச்சில் இனிமை இருந்தால் வாழ்விலும் இனிமை இருக்கும் என்பதற்கு இந்த விஷயங்களே மிகச் சிறந்த சான்று.

வீட்டில் இரவு நேரங்களில் ஈரத் துணிகளை போட்டு வைத்திருந்தாலும், வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க ஆரம்பிக்கும். எப்பொழுதும் இரவு நேரங்களில் ஈரத் துணியை உலர விட்டு விட வேண்டும். அப்படியே மூலையில் போட்டு வைப்பது போன்ற செயல்களை செய்யும் பொழுது, அங்கு எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அது நாம் உடுத்தும் துணிமணிகள் மட்டுமல்ல, நாம் சமையலறையில் பயன்படுத்தும் கரித்துணியாக இருந்தாலும் சரி, இரவு நேரங்களில் ஈரப்படுத்தி போட்டு வைப்பதை தவிர்ப்பது நல்லது. நன்கு பிழிந்து காய வைத்த விட்டாவது வர வேண்டும். இந்த நான்கு விஷயங்களில் நீங்கள் கவனமாக இருந்தால் வீட்டில் நிச்சயம் அனாவசியமான சண்டை, சச்சரவுகள் வராது என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு முயற்சி செய்து பார்க்கலாமே!

- Advertisement -