எந்த விரலில் விபூதியை பூசினால் என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை நீங்கள் அறிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்! விபூதி வைக்கும் முறையும் அதன் பலன்களும்!

- Advertisement -

ஒரு காரியம் உங்களுக்கு வெற்றியாக வேண்டுமென்றால் முதலில் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். திருநீரு அணிபவர்களுக்கு எப்பொழுதும் தோல்வி என்பதே கிடையாது. மேலும் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்களை குணமாக்கக் கூடிய அற்புத மூலிகையாகவும் செயல்படக்கூடிய இந்த திருநீற்றை எந்த விரலில் அணிந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? அணியக்கூடாத முறை என்ன? என்பதையும் இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

நெற்றியில் பட்டை பட்டையாக திருநீறு அணிந்து கொள்வதால் நெற்றியில் இருக்கும் நீர் ஆனது உறிஞ்சப்பட்டு தலை பாரம் குறைகிறது. இதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல், மன இறுக்கம், மற்றும் அவநம்பிக்கை மாறி நல்லதொரு சக்தி கிடைத்த உணர்வு தோன்றுகிறது. ஈசனுடைய அருள் கொண்டிருக்கும் இந்த விபூதி அல்லது திருமண் இருக்கும் இடங்களிலெல்லாம் துஷ்ட சக்திகள் நுழைவது கிடையாது. திருநீறு சாம்பலில் இருந்து பெறப்படுகிறது எனவே சாம்பல் அணிந்து கொண்டால் அகம்பாவம் அழியும் என்கிற ஐதீகம் உண்டு.

- Advertisement -

நாம் பிறக்கும் பொழுது கைகளில் எதையும் கொண்டு வருவதில்லை! போகும் பொழுது இது போல சாம்பலாகி போய்விடப் போகிறோம் என்கிற ஒரு கருத்தை இது நமக்குள் விதைத்து கொண்டே இருக்கிறது. எனவே தினமும் திருநீறு அணிந்து கொண்டால் மிகுந்த நன்மைகளை அடையலாம். அதை எந்த கையால் இட்டுக் கொண்டால் என்ன பலன்கள்? கிடைக்கும் என்பதை இனி பார்ப்போம். திருநீரை எப்பொழுதும் சுண்டு விரலில் தொட்டு அணியக்கூடாது. இதனால் காரிய தடை ஏற்படும்.

திருநீற்றை மோதிர விரலில் தொட்டு நீங்கள் அணிந்து கொண்டால் எவ்வளவு துன்பங்கள் அல்லது துயரங்கள் உங்களைத் துரத்திக் கொண்டு இருந்தாலும், அவை நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கஷ்டமான சமயங்களிலெல்லாம் மோதிர விரலில் தொட்டு நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு பாருங்கள். துன்பம் எல்லாம் பறந்தோடும், இன்பம் நிறைந்து வழியும். நடு விரலில் திருமண்ணை தொட்டு பூசிக் கொண்டால் வாழ்க்கையில் இருக்கின்ற நிம்மதியும் பறி போய்விடும். எனவே நடு விரலில் ஒரு போதும் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளக் கூடாது. நடுவிரலில் எடுத்துக் கொண்டால் பிரச்சினைகளும், சண்டை, சச்சரவுகளையும் அதிகம் சந்திப்பீர்கள்.

- Advertisement -

ஆள்காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசிக் கொண்டால் பொருட்கள் நாசம் ஆகும் என்கிற பலன் உண்டு. ஏதாவது ஒரு பொருட்களை இழக்க நேரலாம் அல்லது சேதம் ஏற்பட்டு வீண் விரயங்கள் ஆகலாம். இது போல பொருட் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த ஒரு செயலை நீங்கள் தவிர்த்து விட வேண்டும். கட்டை விரலால் விபூதியை அணிந்து கொள்வதும் தவறானதாகும். தினமும் கட்டை விரலால் விபூதியை பூசிக் கொண்டால் ஆரோக்கியத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகக் கூடிய இந்த செயலை எப்பொழுதும் செய்ய வேண்டாம்.

மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டு விரலையும் சேர்த்து விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். இதனால் வெற்றி வாகை ரொம்பவே எளிதாக உங்களுக்கு கிடைக்கும். இந்த உலகத்தையே ஆளக்கூடிய அற்புதமான சக்தியை அடைவீர்கள். உங்களுக்கு நிகர் நீங்களே என்பதை காலம் உங்களுக்கு உணர்த்த செய்யும். மேலும் கட்டை விரலைத் தவிர்த்து மற்ற நான்கு விரல்கள் சேர்த்து நெற்றியில் பட்டையாக விபூதி இட்டுக் கொண்டால் இறைவனை நீங்கள் விரைவாக மனக்கண்ணால் காணப் போகிறீர்கள் என்பதையும் குறிக்கிறது.

- Advertisement -