என்ன நினைத்தாலும் அப்படியே நடக்க 7 சனிக்கிழமைகளில் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வீட்டு வாசல்ல பிள்ளையார் இருக்கா அப்போ இதை செய்ய மறக்காதீங்க!

vinayagar-arugampul
- Advertisement -

மனதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். சிறு பிள்ளைகளுக்கு கல்வியில் ஆரம்பித்து, திருமணம், குடும்பம், கடன் வரை ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளை எளிதாக தீர்க்கக் கூடியவர் விக்னங்களை தீர்க்கக்கூடிய விநாயகர் பெருமான் ஆவார். விநாயகப் பெருமானுக்கு 7 சனிக்கிழமைகளில் இந்த அபிஷேகம் செய்து வர நினைத்தது அப்படியே நடக்கும் என்பது ஐதீகம்! இந்த எளிய பரிகாரத்தை எப்படி செய்யலாம்? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் இந்த பரிகாரத்தை ஏழு சனிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்வது சிறப்பு! பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் காலை 8 மணிக்குள்ளாக இந்த அபிஷேகத்தை விநாயகருக்கு செய்து விட வேண்டும் என்பது முக்கியமானது ஆகும். இல்லையேல் பலன் இருக்காது. முந்தைய நாள் வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் நாம் சுத்தம் செய்து பூஜைகள் செய்திருப்போம் எனவே சனிக்கிழமைக்கு தேவையான அருகம்புல்லை அன்றைய நாள் வாங்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு நல்ல எலுமிச்சை கனிகளை வாங்கி வைக்க வேண்டும் அவ்வளவுதான்.

- Advertisement -

மறுநாள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து முடித்துவிட்டு காலையில் மட்டும் ஒரு வேளை உன்னா நோன்பு இருந்து விரதம் இருக்க வேண்டும். ஒருவேளை விரதம் இருந்தால் போதும், மற்ற வேளைகளில் நீங்கள் சைவ உணவை எடுத்துக் கொண்டு சுத்த பத்தமாக இருக்க வேண்டும். பிரச்சனைக்குரியவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வது நல்லது. ஒரு வாரம் செய்ய முடியாமல் போனால் வீட்டில் இருக்கும் மற்றவர் உங்களுக்கு பதிலாக செய்யலாம். ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இப்பரிகாரத்தை செய்யலாம்.

பூஜைக்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி நிறை குடமாக செய்து கொள்ள வேண்டும். எந்த பானையை பயன்படுத்தினாலும் சரிதான். இந்த பானை தண்ணீரில் நீங்கள் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயக பெருமானை நினைத்து உங்களுடைய பிரார்த்தனைகளை முன் வையுங்கள். எத்தகைய மனகுறைகளையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஓம் தத்புருஷாய வித்மஹே,
வக்ரதுண்டாய தீமஹி,
தன்னோ தந்தி ப்ரசோதயாத்!!!

பின்னர் வீட்டு வாசலில் இருக்கக்கூடிய பிள்ளையாருக்கு கொண்டு போய் இந்த அபிஷேக தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்யும் முன்பு நீங்கள் எடுத்து வைத்துள்ள எலுமிச்சை கனிகளை பிள்ளையார் மடியில் வைத்து அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகம் செய்யும் பொழுது கீழ் வரும் இந்த ஸ்லோகத்தை உச்சரித்துக் கொண்டே செய்யுங்கள்.

- Advertisement -

கணபதி சுலோகம்:
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை,
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்,
கணபதி என்றிடக் கருமம்,
ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே!!!

இதையும் படிக்கலாமே:
உங்களைச் சுற்றி ஓர் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அனைத்தும் நொடி பொழுதில் காணாமல் போக இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். துன்பக் கடலில் தத்தளிப்பவர்களின் துயர் நீக்கும் எளிமையான தீப பரிகாரம்.

அபிஷேகம் செய்து முடித்ததும் இரண்டு எலுமிச்சை பழங்களில் ஒன்றினை விட்டு விட்டு மற்றொன்றை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்குள் சென்று விட வேண்டும். வீட்டு வாசலில் பிள்ளையார் இல்லாதோர் அரச மரத்தடி பிள்ளையார், வன்னி மரத்தடி பிள்ளையார் அல்லது பிள்ளையார் கோவில்களில் சென்று இந்த அபிஷேகத்தை செய்யலாம். ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் அதிகாலையில் இதை செய்துவிட்டு விரதம் இருந்து பிரார்த்தித்து வந்தால் நினைத்தது நினைத்தபடி நடந்தே தீரும் என்பது விநாயக பெருமானுடைய பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றளவிலும் இருந்து வருகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை பின்பற்றி வரும் இந்த அபிஷேகத்தை நீங்களும் செய்து பயன்பெறலாமே!

- Advertisement -