தடைகள் நீங்கி வெற்றிகள் பெற விநாயகர் வழிபாடு

vinayagar prayer
- Advertisement -

விக்ணங்களை நீக்கக்கூடிய நாயகன் என்பதால் தான் விநாயகன் என்ற பெயர் வந்தது. விநாயகரை சரணாகதி அடைந்தவர்களின் வாழ்க்கையில் காரிய தடைகள் என்பதே ஏற்படாது என்று தான் கூற வேண்டும். அவரை சரணாகதி அடையா விட்டாலும் செல்லும் காரியம் வெற்றி அடைய அவரை வழிபட்டு விட்டு சென்றாலே போதும் என்று தான் புராணங்கள் கூறுகின்றன. அதற்கேற்றார் போல் தான் அனைத்து விதமான நல்ல காரியங்களை செய்வதற்கு முன்பாகவும் விநாயகரை மஞ்சளில் பிடித்து வைத்து வழிபாடு செய்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் செல்லும் காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி வெற்றிகள் உண்டாக விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

இந்த வழிபாட்டை நாம் இரண்டு வழிகளில் செய்யலாம். வீட்டில் செய்யக்கூடிய வழிபாடு இருக்கிறது. ஆலயத்தில் சென்று செய்யக்கூடிய வழிபாடு இருக்கிறது. முதலில் வீட்டில் செய்யக்கூடிய வழிபாட்டை பார்ப்போம். நாம் ஒரு காரியத்திற்கு செல்வதாக இருந்தால் முதலில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து விளக்கேற்றி சாமி கும்பிட வேண்டும். அப்படி விளக்கேற்றி சாமி கும்பிடும் பொழுது விநாயகப் பெருமானுக்கு அருகம்புல், எருக்கு பூ, வில்வ இலை இவற்றில் எது கிடைக்கிறதோ அதை அவரின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

பிறகு நாம் வீட்டை விட்டு கிளம்பும் பொழுது மறுபடியும் பூஜை அறைக்கு சென்று விநாயகரிடம் மனதார வேண்டிக்கொண்டு நாம் எந்த பொருளை விநாயகரின் பாதத்தில் வைத்தோமோ அதாவது அருகம்புல், எருக்கம் பூ அல்லது வில்வ இலை இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து இருப்போம் அல்லவா? அந்த பொருளை எடுத்து நம்முடன் வைத்துக் கொண்டு கிளம்ப வேண்டும். செல்லும் காரியம் வெற்றி அடைந்த பிறகு விநாயகருக்கு சிதர் தேங்காய் உடைக்க வேண்டும்.

கோவிலுக்கு சென்று செய்வதாக இருந்தால் விநாயகரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அப்பொழுது ஒரு தேங்காய், அருகம்புல் மாலை அல்லது எருக்கம்பூ மாலை என்று நம்மால் எது முடியுமோ அந்த மாலையை எடுத்துக் கொண்டு போக வேண்டும். மாலையை விநாயகருக்கு சமர்ப்பித்து விட்டு தேங்காயை உடைத்து அந்த தேங்காயில் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு அந்த தேங்காய்க்கு சந்தனம் குங்குமம் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏத்தி விநாயகர் பெருமாளை மூன்று முறை வலம் வந்து வழிப்பட வேண்டும். பிறகு அவரிடம் இருந்து அருகம்புல்லை வாங்கிக்கொண்டு செல்லவேண்டும். பிறகு நாம் செல்லும் காரியத்திற்கு சென்றால் அந்த காரியம் வெற்றி அடையும்.

- Advertisement -

இவ்வாறு அந்த காரியத்தை செயல்படுத்துவதற்காக செல்லும் பொழுது “ஓம் விக்ன ராஜாய நமஹ”, “ஓம் சித்தி விநாயகாய நமஹ” என்னும் மந்திரத்தை தொடர்ச்சியாக 11 முறையோ அல்லது 108 முறையோ, மனதிற்குள் உச்சரித்த வண்ணம் செல்ல வேண்டும். இப்படி மந்திரத்தை உச்சரித்த வண்ணம் நாம் சென்றால் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகளை விக்ன விநாயகர் நீக்குவார் என்றும் அந்த தடைகளில் வெற்றியை கொடுப்பதற்கு சித்தி விநாயகர் உதவுவார் என்றும் கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சப்த கன்னிகள் வழிபாடு

அனைத்து இடங்களிலும் எளிதில் வழிபடக்கூடிய தெய்வமாக இருக்கும் விநாயகப் பெருமானை நினைத்து இந்த எளிமையான மந்திரத்தை கூறி காரிய வெற்றியை பெறலாம்.

- Advertisement -