கஷ்டம் என்று வரும் பொழுது மட்டும் கடவுளை வணங்கினால் இப்படி தான் ஆகும்! வேறு எப்போதெல்லாம் கட்டாயம் இறைவனை வணங்க வேண்டும்? அதன் பலன்கள் என்ன தெரிஞ்சிக்கலாமா?

om-food
- Advertisement -

நாம் வீட்டிலும், வெளியிலும் தினந்தோறும் எவ்வளவோ விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்யும் சில செயல்களில் கடவுளை வழிபடுவது வழக்கமாக கொண்டிருப்போம். உதாரணத்திற்கு சிலர் சாப்பிடும் பொழுது கடவுளை வணங்குவது வழக்கம். அன்னத்தில் கையை வைக்கும் முன்பு அன்னபூரணியை வணங்கிவிட்டு சாப்பிட்டால் வறுமை இல்லாத வாழ்வு அமையும் என்பது சாஸ்திரம். அந்த வகையில் இன்னும் எந்தெந்த விஷயங்களை நாம் செய்யும் பொழுது கடவுளை வழிபடுவது நல்லது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

rice1

உணவு சாப்பிடுவதற்கு முன்பு மட்டுமல்ல! சமைக்கும் பொழுது கூட அன்னபூரணியை வணங்குவது குறைவற்ற செல்வத்தை கொடுக்கும். நீங்கள் சமையல் செய்யும் பொழுது அரிசியை போட உலை கொதிக்க வைப்பீர்கள் அல்லவா? அப்போது அரிசியை போடுவதற்கு முன்பு ‘அன்னபூரணியை நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு போட வேண்டும். இவ்வாறு செய்வதால் அள்ள அள்ள குறையாத அன்னம் சேரும்.

- Advertisement -

வெளியூர் அல்லது வீட்டை விட்டு வெகு தூரம் செல்ல இருக்கிறீர்கள்! திரும்பி வர ஓரிரு நாட்கள் ஆகும்! என்றால் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது வீட்டை பூட்டும் போது ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அது போல சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கிளம்பும் பொழுது இது போல் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மேல் விழும் திருஷ்டிகள் தடுக்கப்படும்.

lock-and-key

பல சமயங்களில் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியாமலேயே போவது உண்டு. அதுவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை பார்த்தால் வெளியில் செல்வது என்பதே ஆபத்தான ஒன்று தான். நமக்கு வர இருக்கும் ஆபத்துகளிலிருந்து முன்கூட்டியே நம்மை காப்பவர் ‘பைரவர்’ ஆவார். ஆகவே பூட்டை பூட்டும் பொழுது பைரவரை வழிபட்டு செல்வது நல்லது.

- Advertisement -

நம்முடைய புராணங்களின்படி புண்ணிய நதிகளின் ஆற்றல் அளப்பரியது ஆகும். புண்ணிய நதிகளில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்கிறது சாஸ்திரம். ஆகவே ஜலம் என்பது புனிதமான ஒரு விஷயமாக இருக்கிறது. நம் வீட்டில் குளிக்கும் பொழுது முதல் தண்ணீரை எடுத்து நம் மீது ஊற்றும் பொழுது, அதனை கங்கா தேவியாகவே பாவித்து ‘ஓம் கங்கா தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் ஒழிந்து நல்ல ஆற்றல் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

om-mantra

நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது திடீரென மனதில் பலவிதமான குழப்பங்கள் சில நேரத்தில் எழும். என்னடா இது வாழ்க்கை? எதற்காக நாம் வாழ பிறந்து இருக்கிறோம்? என்கிற கேள்விகள் எல்லாம் தேவை இல்லாமல் எழும். ஒவ்வொரு மனித பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. உங்களுடைய பிறப்பிற்கான அர்த்தத்தை தேடி அலைய வேண்டுமே தவிர! ஏன் பிறந்தோம்? என்கிற விரக்தியை உண்டாக்கி கொள்ளக்கூடாது. இது போன்ற சமயத்தில் சாமி படத்திற்கு முன்பு அமைதியாக தியான நிலையில் அமர்ந்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரித்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் மனக் குழப்பங்கள் அத்தனையும் உடனே தீரும்.

praying-god1

எல்லா மனிதர்களும் செய்யும் மிகப் பெரிய தவறு கடவுளை கஷ்டம் என்று வரும் பொழுது மட்டுமே நினைத்துக் கொள்வது ஆகும். நல்லது அல்லது மனதில் சந்தோஷம் இருக்கும் பொழுதும் கடவுளை நாம் உணர வேண்டும். நல்லது! கெட்டது! எதுவாக இருந்தாலும் நம்மை சுற்றியிருக்கும் போலியான மனிதர்களிடம் கூறுவதைக் காட்டிலும், நம்மை படைத்த இறைவனிடம் கூறி மகிழ்ச்சி அடைந்தால் வாழ்வில் என்றுமே சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. இப்படி நாம் செய்யும் முக்கியமான ஒவ்வொரு செயல்களிலும் இறைவனை வேண்டி வணங்கினால் தோல்வி என்பதே நமக்கு ஏற்படாது என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

- Advertisement -