ரொம்ப ரொம்ப ஈஸியா 10 நிமிடத்தில் இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள சூப்பரான தக்காளி குருமா செய்வது எப்படி.

kuruma5
- Advertisement -

குருமா என்றாலே பட்டை இலவங்கம் இஞ்சி பூண்டு விழுது என்று சேர்த்து கஷ்டப்பட்டு தான் செய்வோம். ஆனால், இந்த குருமா வைப்பது ரொம்ப ரொம்ப ஈஸி. இதனுடைய சுவை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, இவைகளுக்கு தொட்டுக்கொள்ள சிம்பிள் சைட் டிஷ், சூப்பர் சைட் டிஷ். நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1/2 இன்ச் அளவு – இஞ்சி, தோல் உரித்த பூண்டு பல் – 3, பச்சை மிளகாய் – 3 இந்த மூன்று பொருட்களையும் போட்டு தண்ணீர் எதுவும் போடாமல் அப்படியே கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்த குருமாவில் மிளகாய்தூள் சேர்க்க போவது கிடையாது. பச்சை மிளகாய் காரம் தான். உங்கள் தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ மிளகாய் வைத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து பெரிய சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுதை போட்டு இதனுடைய பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2, மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு தக்காளிப்பழத்தை குழைய வதக்கி விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு மூடி போட்டு கூட வேகவைத்து வதக்கிக் கொள்ளலாம். தக்காளிப்பழம் நன்றாக வதங்கி வரட்டும்.

- Advertisement -

அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் 2 – கைப்பிடி அளவு தேங்காய் துருவல், 1 – ஸ்பூன் கசகசா, சோம்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து இந்த தேங்காய் விழுதையும் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

கடாயில் இருக்கும் தக்காளி நன்றாக வதங்கி வந்தபிறகு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் ஊற்றி, கூடவே தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, நன்றாக கலந்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் போதும். சூப்பரான தக்காளி குருமா சோம்பு வாசத்துடன் தயாராகியிருக்கும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி மணக்க மணக்க பரிமாறி பாருங்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.

- Advertisement -