நாள் முழுவதும் தேவைப்படக்கூடிய வீட்டிற்கு தேவையான சமையலறை குறிப்புகள் 10 இதோ உங்களுக்காக!

idli-podi-dosai
- Advertisement -

காலையில் எழுந்து தோசை வார்ப்பது முதல் இரவு படுக்க செல்லும் வரை அதிக நேரத்தைச் செலவிடும் இடம் மற்றும் அதிக நேரம் உபயோகத்தில் இருக்கும் இடம் என்றால் அது சமையல் அறை தான். சமையலறையை எப்போதும் சுத்தமாகவும், அதே நேரத்தில் குறைந்த பொருட்களை பயன்படுத்தி நல்ல ஆரோக்கியத்துடன் சமைக்க கற்றுக் கொண்டால் வேலையும் சுலபம் ஆகும். உங்களுக்கு பயனுள்ள சமையலறை குறிப்புகள் 10 இதோ உங்களுக்காக.. இந்த பதிவின் மூலம் நீங்களும் இதனை தெரிந்து கொள்ளலாமே!

குறிப்பு 1:
தோசை மாவில் சரியாக தோசை சுட வரவில்லை என்றால் ஒரு கைப்பிடி அளவிற்கு ரவையை லேசாக வறுத்து தோசை மாவில் சேர்த்து பின்னர் தோசை வார்த்துப் பாருங்கள் தோசை கிழியாமல் சூப்பராக பட்டு போல வரும்.

- Advertisement -

குறிப்பு 2:
கருவேப்பிலை மற்றும் கீரை வகைகளை பால் காய்ச்சும் பால் குக்கரில் போட்டு மூடி வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பத்திரமாக பிரஷ்ஷாக இருக்கும். கொஞ்சம் கூட வாடவே செய்யாது.

குறிப்பு 3:
ஞாபக மறதி இருப்பவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள் சூடாக இருக்கும் பாலுடன் கொஞ்சம் கேரட் சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து கொடுத்து பாருங்கள். விரைவிலேயே நினைவாற்றல் நல்ல நிலையில் செயல்பட ஆரம்பிக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
உடம்பில் இருக்கும் சோர்வு உடனடியாக நீக்குவதற்கு வெது வெதுப்பாக இருக்கும் தண்ணீரில் எலுமிச்சை சாறு ஒரு மூடி மற்றும் அதனுடன் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் உடனடியாக களைப்பு மாறி சுறுசுறுப்பை அடைந்து விடுவீர்கள்.

குறிப்பு 5:
வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை எளிதாக ஆற்ற ஒரு கப் தேங்காய் பாலுடன், ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் சேர்த்து அடிக்கடி பருகி வாருங்கள், விரைவிலேயே குணப்படுத்தி விடலாம்.

- Advertisement -

குறிப்பு 6:
பருப்பு ரசம் செய்யும் பொழுது தக்காளியை கூடுதலாகவும், கொஞ்சம் நெய்யும் சேர்த்து செய்து பாருங்கள் வீடே மணக்கும்.

குறிப்பு 7:
இட்லி பொடியை வீட்டில் அரைப்பவர்கள் அதனுடன் கொஞ்சம் வேர்க்கடலை பொடி சேர்த்து அரைத்து பாருங்கள் சுவை சூப்பராக இருக்கும்.

குறிப்பு 8:
பாகற்காய் சமைக்கும் பொழுது அதில் இருக்கும் கசப்பை முதலில் நீக்குவதற்கு சிறிது நேரம் உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எடுத்து காரம் சற்று தூக்கலாக சேர்த்து சமைத்து பாருங்கள் கொஞ்சம் கூட கசப்பே தெரியாது.

குறிப்பு 9:
ரவை கேசரி சர்க்கரை சேர்த்து செய்வது தான் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நீங்கள் வெல்லத்தை சேர்த்து செய்து பாருங்கள், அதனுடைய சுவையே வித்தியாசமாக சூப்பராக இருக்கும்.

குறிப்பு 10:
வளரும் இளம் குழந்தைகள் சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக இருந்தால் சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் சிறிதளவு கேரட், மிளகு ஆகியவற்றை போட்டு சூப் போல செய்து கொடுத்துப் பாருங்கள். துள்ளி குதித்து ஓடி ஆடி நல்ல சுறுசுறுப்புடன் விளையாட ஆரம்பிக்கும்.

- Advertisement -