வெறும் இரண்டே நிமிடத்தில், 2 தக்காளியை வைத்து கார சட்னி. இட்லிக்கு தொட்டு சாப்பிட இதைவிட ஈசி சைட்டிஷ் இருக்க முடியாது.

road-side-tomato-chutney
- Advertisement -

ரொம்ப கஷ்டம் இல்லாமல் வீட்டில் இருக்கும் இரண்டு தக்காளி பழத்தை வைத்து இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள காரசாரமான சூப்பர் சட்னி அரைப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதைவிட ஈசியாக ஒரு சட்னி செய்ய முடியாது. அதே சமயம் இதைவிட சுவையா வேறு எந்த சட்னியிலும் கிடைக்காது அப்படி என்று கூட சொல்லலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் இன்ஸ்டன்ட் சட்னியை இப்போதே தெரிந்து கொள்வோம்

ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மீடியம் சைஸில் இருக்கும் 2 பழுத்த தக்காளிப் பழங்களை நறுக்கி போட்டு கொள்ளவும். தக்காளி பழத்தின் காம்புகளை நீக்கி விடுங்கள். இதோடு வரமிளகாய் – 10, கோலிக்குண்டு அளவு – புளி, இஞ்சி தோல் சீவியது – 1/2 இன்ச், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை வைத்து தண்ணீர் ஊற்றாமல் விழுது போல அறைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி நிறைய வெச்சிட்டீங்கன்னா இஞ்சியின் கசப்பு தன்மை லேசாக சட்னியில் தெரியும். இஞ்சியின் அளவை பார்த்து சரியா வச்சுக்கோங்க.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன் போட்டு தாளித்து கொதிக்க கொதிக்க இருக்கும் இந்த எண்ணெயில் மிக்ஸி ஜாரில் இருக்கும் சட்னியை ஊற்றி உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த சூட்டிலேயே சட்னியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் தான் தாளிக்க வேண்டும்.

அவ்வளவு தான். சட்னி தயார். சுடச்சுட இட்லிக்கு பக்கத்துல இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையா இருக்கும். தேவைப்பட்டால் இதோட தேங்காய் சட்னி வைத்து பரிமாறுங்கள். இதன் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். தக்காளிப் பழம் நன்றாக பழுத்த தக்காளி பழமாக பார்த்து செலக்ட் பண்ணிக்கோங்க.

- Advertisement -

பின்குறிப்பு: இதில் உப்பு காரம் பளிப்பு தூக்கலாக தான் இருக்க வேண்டும். புளிப்பு சுவைக்கு காரம் குறைவாக இருந்தால் அவ்வளவு சுவை தராது. ஆகவே காரத்தை குறைக்காதீங்க. சுடச்சுட இட்லி சுட சுட கல் தோசைக்கு இது வேற லெவல் சைடிஷ் ஆக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பேக்கரி ஸ்டைல் பால்கோவா ரொம்ப ஈஸியா, அதுவும் ரெண்டே பொருளை வைச்சு, வீட்டிலயே எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கா? வாங்க எப்படின்னு செய்து பாத்துடலாம்.

காரம் அதிகமாக இருக்கும் போது அதன் மேலே கொஞ்சம் எண்ணெய் விட்டு சாப்பிடலாம். அவசரத்துக்கு தொட்டுக்க எதுவுமே இல்லனா மிஸ் பண்ணாம இந்த சட்னியை ஞாபகம் வச்சு செய்யுங்க.

- Advertisement -