இந்த சுவையான ஆந்திரா கத்திரிக்காய் மசாலாவை ஒரு முறை செய்து சுவைத்து விட்டால், இனி அடிக்கடி உங்கள் வீட்டில் இதைத்தான் செய்வீர்கள்

brinjal
- Advertisement -

கத்திரிக்காய் மசாலா ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது இந்தியா தவிர பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலம். சாதம், சப்பாத்தி, பரோட்டா, முக்கியமாக பிரியாணியுடன், கத்திரிக்காய் மசாலா சுவையாக இருக்கும். இது வேர்க்கடலை, வெள்ளை எள், புளி, தேங்காய், ஆகியவற்றை கொண்டு ஸ்டஃபிங் செய்யப்பட்டு,  பின்னர் வேக வைத்து மசாலா செய்யப்படும். இது குட்டி வெங்காய மசாலா என்று கூறப்படும். ஆந்திரா கத்திரிக்காய் மசாலாவில் பல வகைகள் உண்டு. மசாலா அரைத்து அதனுள் ஸ்டஃபிங் செய்து பயன்படுத்துவது அல்லது முழு கத்தரிக்காயை நடுவில் கீறி எண்ணெயில் பொரித்து செய்யலாம். அல்லது பச்சை கத்தரிக்காய் கொண்டு செய்யப்படும்.  வாருங்கள் இந்த சுவையான ஆந்திரா கத்திரிக்காய் மசாலாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வவோம்

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 500 கிராம், வேர்க்கடலை – 1/4 கப், வெள்ளை எள் – ஸ்பூன், கொத்தமல்லி விதைகள் – 4 ஸ்பூன், துண்டு பட்டை – 1, ஏலக்காய் _ 5, லவங்கம் – 5, வெந்தயம் – 1/2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, துருவிய தேங்காய் – 4 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – 1/2, கறிவேப்பிலை – ஒரு குத்து, பச்சை மிளகாய் – 3, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது _ 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், தயிர் – 1/4 கப், புளி சாறு – 1/4 கப், கொத்தமல்லி _ ஒரு குத்து.

- Advertisement -

செய்முறை :
ஒரு வாணலியில் கால் கப் வேர்க்கடலை சேர்த்து, அதனை அடுப்பின் மீது வைத்து, மிதமான சூட்டில் 1 முதல் 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தனியே ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.

பிறகு 4 ஸ்பூன் வெள்ளை எள் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும். 4 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள் சேர்த்து ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அதனையும் தனியே எடுத்து வைக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு துண்டு பட்டை, 5 ஏலக்காய், 5 லவங்கம், அரை தேக்கரண்டி வெந்தயம், 10 காய்ந்த மிளகாய்,  ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். ஒரு நிமிடத்திற்குப் பின்னர் தனியே எடுத்து வைக்கவும். 4 தேக்கரண்டி தேங்காய் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுத்துக்கொள்ளவும் பின்னர் அடுப்பை அணைத்து விட்டு தனியே வைக்கவும். இப்பொழுது வறுத்து வைத்த வற்றை ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு,  அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், மற்றும் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் சிறிதளவு நறுக்கிய வெங்காயம் மற்றும் கத்தரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும். கத்தரிக்காய் நன்றாக வதங்கியதும் புளி தண்ணீர் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொதிக்க வைத்தால், சுவையான ஆந்திரா கத்திரிக்காய் மசாலா தயாராகிவிடும்.

- Advertisement -