இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி சாம்பார் என்று இல்லாமல் இரண்டு பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த சுவையான டிஷ்ஷை உடனே செய்து பாருங்கள்

brinjal-chutney
- Advertisement -

இப்பொழுதெல்லாம் அனைவரது வீட்டிலும் இட்லி, தோசை இல்லாத நாள் என்று ஒரு நாளும் இல்லை. காலை அல்லது மாலை இவற்றில் ஏதாவது ஒரு வேளையாவது நிச்சயம் இந்த இட்லி, தோசை இருப்பதுண்டு. எனவே இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அடிக்கடி செய்யும் உணவுகள் என்றால் அது சாம்பார் அல்லது சட்னி தான். எவ்வளவு யோசித்தாலும் இதைத் தவிர வேறு என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இந்த பதிவில் கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய சுவையான ஒரு சைடிஷ் பற்றிதான் தெரிந்துகொள்ள போகின்றோம். அதனை மிகவும் ஈஸியாக குறைவான நேரத்தில் செய்துவிட முடியும். ஒரு முறை இதைச் செய்து விட்டால் போதும் இனிமேல் உங்கள் வீட்டில் வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த டிஷ்ஷை செய்துவிடுவீர்கள். அந்த அளவிற்கு இதன் சுவை மிக அற்புதமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

chappathi-gravy1

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, உருளைக்கிழங்கு – 100 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, புளி – நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் – 3, வரமிளகாய் – 3, எண்ணெய் – 3 ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கத்திரிக்காயை நீளவாக்கில் அரிந்து தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பின்னர் உருளைக் கிழங்கின் மேல் உள்ள தோலை சீவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.

brinjal1

பின்னர் ஒரு குக்கரில் நறுக்கி வைத்த கத்தரிக்காய் மற்றும் உருளை கிழங்கை சேர்த்து இவற்றுடன் பச்சை மிளகாய், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு மற்றும் கால் ஸ்பூன் பெருங்காய தூள் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, குக்கரை மூடி அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு குக்கரில் 3 விசில் வரும் வரை அப்படியே வேக வைக்க வேண்டும். அதன்பின் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, மூன்று ஸ்பூன் எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 3 காய்ந்த மிளகாயை உடைத்து சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

tomato-brinjal-kadayal2

பின்னர் நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் குக்கரை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, காய்கறிகளை மத்து வைத்து கடைந்து கொள்ள வேண்டும். பிறகு கடைந்த காய்கறிகளையும் அதிலிருந்த தண்ணீரையும் வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து, நன்றாக கலந்து விட்டு, ஒரு கொதி வந்ததும், இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -