கத்தரிக்காயுடன் கடலைப்பருப்பு சேர்த்து இப்படி சுவையான கூட்டு செய்தால் சுடச்சுட சாதத்துடனும், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்

brinjal
- Advertisement -

என்னதான் வீட்டில் இருப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பார்த்து பார்த்து சமைத்துக் கொடுத்தாலும், ஒரு சில நாட்களில் அவர்களுக்கு பிடிக்காத உணவுகளையும் சமைக்க வேண்டியிருக்கும். ஆனால் இவ்வாறான காய்கறி உணவுகள் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியம் உள்ளதாக இருக்கிறது. எனவே இவற்றை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது அனைவருக்கும் மிகவும் நல்லது. எனவே அவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த காய்கறிகளை சமைத்து கொடுத்தால் நிச்சயம் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். அப்படி சாதம், இட்லி, தோசை என அனைத்து வகையான உணவுடனும் சேர்த்து சாப்பிட ஏற்றதாக இருக்கும் இந்த கத்தரிக்காய் கூட்டை ஒரு முறை செய்து கொடுத்தால் போதும். மீண்டும் இதனையே செய்து கொடுங்கள் என்று அனைவரும் கேட்க ஆரம்பிப்பார்கள். வாருங்கள் இப்படி சுவையான கத்தரிக்காய் கூட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, கடலைப் பருப்பு – 50 கிராம், வெங்காயம் – 2, தக்காளி – 2, பூண்டு – 5 பல், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கத்தரிக்காயின் காம்பை மட்டும் வெட்டி விட்டு, அவற்றை பொடியாக நறுக்கி தண்ணீரில் சேர்க்க வேண்டும். பின்னர் தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு 50 கிராம் கடலைப் பருப்பை குக்கரில் சேர்த்து அதனை இரண்டு முறை தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஐந்து பல் பூண்டை உரலில் வைத்து தட்டி சேர்க்க வேண்டும். பிறகு வெங்காயம், கருவேப்பிலை மற்றும் தக்காளி இவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் கத்தரிக்காயையும் சேர்த்து, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வேக வைக்க வேண்டும்.

பின்னர் கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் இவற்றுடன் வேகவைத்த கடலைப் பருப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி விட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் கடலைப்பருப்பு கூட்டு தயாராகிவிட்டது.

- Advertisement -