ரசப்பொடி எதுவும் இல்லாமலேயே அசத்தலான சுவையில் இருக்கும் ஹோட்டல் ஸ்டைல் செட்டிநாடு ரசம் இதுதான்

rasam
- Advertisement -

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு போன்ற மசாலாக்கள் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. செட்டிநாடு சுவையில் ஓட்டல்களில் வைக்கப்படும் சுவையான ரசத்தை எவ்வாறு நாமும் வீட்டில் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

food

தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சை அளவு, சிறிய வெங்காயம் – 1, தக்காளி – 2, பச்சை மிளகாய் – இரண்டு, காய்ந்த மிளகாய் – இரண்டு, மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒன்றரை ஸ்பூன், பூண்டு – 6 பல், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, எண்ணெய் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் புளியை 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து நன்றாக கரைத்து, அதனுடன் 1 தக்காளியை நான்காக அரிந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத் தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

puli-karaisal

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 6 பல் பூண்டு, 2 காய்ந்த மிளகாய், ஒரு தக்காளி இவற்றை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவேண்டும். இந்த கலவையை புளித் தண்ணீருடன் சேர்த்து, அதன்பின் ஒரு பிடி கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து அனைத்தையும் கைகளைக் கொண்டு நன்றாக பிசைந்துவிட வேண்டும்.

- Advertisement -

அதன்பின் ஒரு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

onion

பின்னர் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை கடாயில் ஊற்றி லேசாக கொதி வரும்வரை அப்படியே வைத்து விட்டு, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு சுவையில் ஹோட்டல் ரசம் தயாராகிவிட்டது.

rasam 1

இவ்வாறு நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து சுடச்சுட சாதத்துடன் ரசம் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவைக்கு ஈடு இணையே இருக்காது. அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் கூட ரசம் ஊற்றி நன்றாக சாதத்தைப் பிணைந்து கொடுத்து பாருங்கள். மிச்சம் வைக்காமல் முழுவதுமாக சாப்பிட்டு முடித்து விடுவார்கள்.

- Advertisement -