உங்கள் வீட்டை பிடித்திருக்கும் பீடை, நீங்க வேண்டும் என்றால், தீப வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும்?

deepam1

சில பேர் வீடுகள் இருள் சூழ்ந்த நிலை இருக்கும். எத்தனை தீபம் ஏற்றி வைத்து, எத்தனை மின்விளக்குகள் போட்டாலும், அந்த வீட்டில் இருக்கும் இருள் மட்டும் நீங்கவே நீங்காது. குழந்தைகளை பயமுறுத்துவார்கள் அல்லவா? பேய் வீடு என்று சொல்லி, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை அமைந்திருக்கும். எவ்வளவுதான் சுத்தம் செய்து, எவ்வளவுதான் வர்ணம் பூசி, எவ்வளவுதான் அழகு படுத்தினாலும் அந்த வீட்டில், கலை என்பது இருக்கவே இருக்காது. வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்தவிதமான நிம்மதியும் சந்தோஷமும் இருக்காது. வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட வீட்டை பீடை பிடித்து வீடு என்று சொல்லுவார்கள்.

vilakku-deepam

ஒருவருடைய வீட்டில் பீடை குடி புகுந்து விட்டால், அந்த வீடு லட்சுமி கடாட்சத்தை இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு நாம் செய்த கர்மவினை தான் கட்டாயம் காரணமாக இருக்கும். கர்மவினைகளை போக்கக்கூடியது சக்தி தீப வழிபாட்டிற்கு உள்ளது. நம் வீட்டை பிடித்திருக்கும் பீடை நீங்கவும், நம் கர்ம வினை நீங்கும், தீப வழிபாட்டை, நம்முடைய வீடுகளில் முறைப்படி எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே தீப வழிபாட்டுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. நம்முடைய வீட்டின் நிலைப்படியில் கட்டாயம் 2 மண் அகல் தீபம் ஏற்ற வேண்டும். அதுவும் காலை நேரத்தில், நல்லெண்ணெய் ஊற்றி, அந்த தீபத்தை ஏற்றிவைத்தால், வீட்டிற்குள் பீடை நுழையாது என்று சொல்கிறது சாஸ்திரம். பொதுவாகவே நல்லெண்ணெய்க்கு பீடையை அகற்றும் குணம் உள்ளது.

deepam

அடுத்ததாக வீட்டு பூஜை அறையில் எப்போதுமே ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அதற்கு இணையான, தீபம் வேறு எதுவுமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மண் அகல் தீபத்தை, விளக்கெண்ணெய் ஊற்றி, குலதெய்வத்திற்கு முன்பு எப்போதுமே ஒளிர விட்டால், நம் வீடு சுபிட்சமாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்கள் வீட்டில், உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் திருவுருவப்படம் இருந்தால், அந்த திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய மண் அகல் தீபத்தை, தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபத்தை ஒளிர விடுவது அதிகப்படியான நன்மையை தேடித்தரும்.

vilakku deepam

உங்களுடைய வீட்டில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கில், நெய்தீபம் ஏற்றுவது நம்முடைய வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. முடியாதவர்கள் நல்எண்ணெயில் காமாட்சியம்மன் தீபத்தை ஏற்றலாம். இருப்பினும், எவ்வளவோ செலவு செய்கின்றோம். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவதற்கு சுத்தமான நெய் வாங்குவதற்கு ஆகும் செலவை எவரொருவர் கணக்குப் பார்க்காமல் இருக்கின்றாரோ, அவர்களது கையில் கணக்கு பார்க்காமல் பணம் பொருள் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Annapoorani

பொதுவாகவே நம் வீட்டு சமையல் அறையில் அன்னபூரணியின் படத்தை வைத்து வழிபட வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த அன்னபூரணியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக, ஒரு நல்லெண்ணை, மண் அகல் தீபம் ஏற்றி வைத்து, தினந்தோறும் வழிபடுவது நம்முடைய வீட்டிற்கு தன தானியத்தை குறைவில்லாமல் கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

deepam

எவர் ஒருவருடைய வீட்டில் இந்த ஐந்து இடங்களிலும், ஐந்து வகையான தீபத்தை முறைப்படி ஏற்றி வழிபட்டு வருகின்றார்களோ, அவர்களுடைய வீட்டில், கட்டாயம் பீடை, குடி போகாது என்று சொல்கிறது சாஸ்திரம்.

velli vilaku

ஆனால், இந்த 5 தீபங்களையும், உங்களுடைய வீட்டை சுத்தம் செய்த பின்புதான் ஏற்ற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வீடு கூட்டாமல், அழுக்கு துணி துவைக்காமல், பழைய குப்பைகளை நீக்காமல் வீட்டில் துர்நாற்றம் வீசும் போது, தீபவழிபாடு பலனளிக்காது என்பதும் உண்மைதான். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு உங்கள் வீட்டில் இந்த முறைப்படி தீப வழிபாட்டை செய்து பாருங்கள் நிச்சயம் கைமேல் பலன் உண்டு என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வெள்ளிக்கிழமையில் உப்பை எங்கு வைக்க வேண்டும்? உப்பு பாத்திரம் அடியில் இதை மட்டும் வைத்து பாருங்கள், வீட்டில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி அதிசயம் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Deepam etrum ennai. deepam etrum murai. Deepam etrum murai in tamil. deepam vilakku etrum ennai