ஹோட்டலில் சாம்பார் சுவையாக இருக்க இந்த பொருள் தான் சேர்த்து செய்றாங்கன்னு சொன்னா யாரும் நம்பவே மாட்டீங்க! வாங்க அதை எப்படி செய்றாங்கன்னு பார்க்கலாம். ஹோட்டல் சுவையில் இட்லி சாம்பார் செய்வது எப்படி?

- Advertisement -

வீட்டில் என்ன தான் நாம் ருசியாக செய்து கொடுத்தாலும் ஹோட்டல் சாப்பாடு என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொஞ்சம் மனது அதற்கு ஆசைப்பட தான் செய்யும். ஏனென்றால் அதன் சுவை அப்படி நாம் வீட்டில் என்ன தான் ட்ரை பண்ணாலும், அந்த சுவை யானது நமக்கு வராது. அதுக்கு காரணம் அவங்க அதுல சேர்க்கிற சில பொருட்கள் தான் இப்போ நாமும் வீட்டில் அதே ஹோட்டல் சுவையில் சூப்பரான இட்லி சாம்பார் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

செய்முறை

இந்த சாம்பார் செய்வதற்கு ஒரு குக்கரில் 4 பெரிய பழுத்த தக்காளியை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் 2 பெரிய வெங்காயத்தையும் கொஞ்சம் பெரிய துண்டுகளாகவே நறுக்கி சேர்த்து அத்துடன் 2 பச்சை மிளகாய், 4 பல் பூண்டு இவற்றுடன் 1 உருளைக் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து அதை சிறிய துண்டுகளாக நறுக்கி அதையும் இதில் சேர்த்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் சோம்பு இவையெல்லாம் சேர்த்த பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து குக்கரை மூடி வைத்து விடுங்கள். இது 5 விசில் வரை வேக விடுங்கள். உருளைக்கிழங்கு சேர்த்து இருப்பதால் கொஞ்சம் நன்றாக வெந்தால் தான் மசிக்க சரியாக இருக்கும். எனவே ஐந்து விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது குக்கரில் விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை தனியாக வடித்து விட்டு அதில் இருக்கும் வெங்காயம், தக்காளி உருளைக்கிழங்கு அனைத்தையும் ஒரு மத்து வைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இப்போது இத்துடன் நாம் ஹோட்டலில் செய்யும் அந்த சீக்ரெட் பொருளை கலக்கப் போகிறோம். அது வேறு எதுவும் இல்லை இட்லி மாவு தான். 2 டேபிள் ஸ்பூன் இட்லி மாவை இதில் கலந்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அப்போது அடுப்பைப் பற்றி வைத்து ஒரு கடாய் வைத்த பிறகு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து 10 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நீங்கள் மசித்து வைத்திருக்கும் சாம்பாரை இதில் சேர்த்து ஏற்கனவே எடுத்து வைத்த வெங்காயம், தக்காளி வேக வைத்த தண்ணீரையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீரையும் இப்போதே சேர்த்துக் கொள்ளுங்கள் மாவு சேர்த்து இருப்பதால் இது கொஞ்சம் கெட்டியாக வரும்.

இப்போது சாம்பார் நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இறக்கும் போது கடைசியாக கொஞ்சம் கொத்துமல்லி தழை மேலே தூவி அதன் பிறகு 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூளையும் சேர்த்து மூடி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மதுரை ஸ்பெஷல் கழனி புளிச்சாறு நம்ம வீட்டிலேயே ரொம்ப சுலபமாக எப்படி செய்வது? நாவூரும் சுவையில் கழனி ரசம்!

அவ்வளவு தான் மணக்க மணக்க சுவையான ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெடி. ஒரு எப்படி சாம்பார் வைத்து பாருங்கள் இனி நீங்கள் எப்ப சாம்பார் வைத்தாலும் இப்படி தான் வைப்பிங்க.

- Advertisement -