ஹோட்டல் சாம்பாரின் சீக்ரெட் இது தான். இப்படி ஒரு முறை சாம்பார் வைத்து பாருங்களேன். சுவையில் சரவணபவன் ஹோட்டல் சாம்பார் தோற்றுப் போகும்.

sambar
- Advertisement -

சாம்பார் வைப்பது என்றாலே கொஞ்சம் கஷ்டமான வேலை தான். அதில் சுவையான சாம்பார் வைப்பது மிக மிக கஷ்டம். இட்லிக்கு மேலே வார்த்து சாப்பிடக்கூடிய ஹோட்டல் டிபன் சாம்பார் வைப்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய சவால்தான். இட்லி தோசைக்கு அல்லது பொங்கல், சாம்பார் வடைக்கு ஏற்ற சூப்பராக ஒரு சாம்பார் வைப்பது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இது ஒரு புது மெத்தட் ஆக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். ருசி சூப்பராக கிடைக்கும்.

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, தக்காளி 2 இந்த பொருட்களை நறுக்கி போட்டுக்கோங்க. கருவாப்பிலை 1 கொத்து, சாம்பார் பொடி 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தூள் 1 டேபிள் ஸ்பூன், புளி சின்ன நெல்லிக்காய் அளவு, தோல் உரித்த பூண்டு பல் 4 போட்டு, 100ml அளவு தண்ணீரை ஊற்றி இதை அப்படியே மூடி மூன்று விசில் வைத்து, பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சாம்பாருக்கு 100 கிராம் துவரம் பருப்பில், 2 ஸ்பூன் பாசிப்பருப்பை போட்டு, தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் பொடி போட்டு நன்றாக வேக வைத்து பருப்பை கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த  பருப்பும் அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் ஒரு கலையை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், பெருங்காயம் 1/4 ஸ்பூன், வரமிளகாய் கிள்ளியது 2 போட்டு, சின்ன வெங்காயம் 10 போட்டு, நன்றாக வதக்கி விட்டு, அரைத்து வைத்திருக்கும் விழுதை இதில் ஊற்றி, இரண்டு நிமிடம் போல வதக்கி விட்டு வேக வைத்திருக்கும் பருப்பை கடாயில் ஊற்றி, இந்த சாம்பாருக்கு தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

3/4 லிட்டரில் இருந்து, 1 லிட்டர் அளவு தண்ணீர் இந்த சாம்பாரில் ஊற்றலாம். இறுதியாக சாம்பாருக்கு தேவையான அளவு உப்பை போட்டு நன்றாக பத்து நிமிடம் கொதிக்க வையுங்கள். இதில் விருப்பப்பட்டால் முருங்கைக்காய் சேர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: அரிசி கஞ்சியை தலையில் இப்படி போட்டால் அசுர வேகத்தில் தலை முடி தாறுமாறாக வளரும். பிறகு வளரும் முடியை கட்டுப்படுத்த முடியாது.

சாம்பார் பச்சை வாடை போக நன்றாக கொதி வந்ததும் வெல்லம் 1 ஸ்பூன் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டால் சூப்பரான டிபன் சாம்பார் தயார். சுடச்சுட இட்லி மீது இந்த சாம்பாரை வார்த்து அப்படியே சாப்பிட்டு பாருங்கள். வேறு எதுவுமே தேவை கிடையாது. இதில் சாம்பார் வடை செய்தாலும் அருமையாக இருக்கும். ஹோட்டல் சுவையில் ஒரு முறை இந்த சாம்பாரை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக வீட்டில் இருப்பவர்களிடம் பாராட்டை பெறுவீர்கள்.

- Advertisement -