அட இட்லிக்கு இப்படி கூட மசாலா அரைத்து ஊற்றி சாம்பார் வைக்கலாமா? இவ்வளவு ஈஸியா, இவ்வளவு சுவையா யாராலும் டிபன் சாம்பார் வைக்கவே முடியாது. வேற லெவல் இட்லி சாம்பார் ரெசிபி இதோ உங்களுக்காக.

sambar
- Advertisement -

சுட சுட இட்லிக்கு மேல் வார்த்து சாப்பிட ஒரு டிபன் சாம்பார் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. சாம்பாரின் சுவை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு வீட்டில் இருப்பவர்கள் இட்லியை விருப்பமாக சாப்பிடுவார்கள். இட்லி சாம்பார் என்றாலே அது வேற லெவல் டேஸ்டில் இருக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் இட்லி செய்தால் ஒருமுறை இப்படி சாம்பார் வைத்து பாருங்கள். இதன் சுவை அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரே மாதிரி சாம்பார் வைத்து போர் அடிக்கும்போது கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணலாம் என்று யோசித்தால் இந்த சாம்பார் ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம்.

செய்முறை

ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளவும். அதில் 100 கிராம் துவரம் பருப்பை போட்டு நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு, துவரம் பருப்பு மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரை ஊற்றி, நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் 1, தோலுரித்த பூண்டு பல் 6, பெரிய தக்காளி பழம் 1 நறுக்கியது, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு இந்த பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். இதில் உங்களுக்கு ஏதாவது காய்கறி தேவை என்றால் கேரட் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம். முருங்கைக்காய் தேவை என்றாலும் இதோடு சேர்த்து வேக வைத்துக் கொள்ளலாம். மூன்றில் இருந்து நான்கு விசில் விட்டு இந்த பருப்பை வேக வைக்கவும்.

- Advertisement -

பருப்பு வேகட்டும். இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை 2 ஸ்பூன், வரமிளகாய் 3, சாம்பார் தூள் 2 ஸ்பூன், போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன கோலிகுண்ட அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து புளி கரைசலையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது குக்கரில் பருப்பு வெந்து வந்திருக்கும் அல்லவா. அதை மத்து போட்டு மசித்து கொள்ளுங்கள். மீண்டும் குக்கரை பருப்போடு அடுப்பில் வையுங்கள். இந்த பருப்பில் முதலில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றவும். பிறகு கரைத்து வைத்திருக்கும் புளியை ஊற்றவும். சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு போட்டு, சாம்பார் நன்றாக கொதிக்க வையுங்கள். சாம்பார் ரொம்பவும் திக்காக தொடங்கும். முதலிலேயே அதாவது மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அரவையை ஊற்றும் போதே, சாம்பாருக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சாம்பார் 10 லிருந்து 12 நிமிடங்கள் பச்சை வாடை போக கொதிக்கட்டும். இறுதியாக இதற்கு 2 ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெயில் கடுகு, கருவாப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், தாளித்து கொட்டி மேலே கொத்தமல்லி தலையை தூவி அடுப்பை அணைத்தால் சூப்பரான சுவையில் மணக்க மணக்க ஒரு சாம்பார் ரெடி.

இதையும் படிக்கலாமே: மீதமான சாதத்தில் சுவையான பாயாசம் எப்படி செய்யணும் தெரியுமா? இது தெரிஞ்சா இனி சாப்பாட்டை தூக்கி போட மாட்டீங்க!

நாம் அரைத்து ஊற்றி இருக்கும் அரவை இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவையை உங்க வீட்டு சாம்பாருக்கு கொடுக்கும். சுடச்சுட இட்லிக்கு மேலே இந்த சாம்பாரை வார்த்து சாப்பிட்டு பாருங்கள். வேற லெவல் டேஸ்டுங்க. இட்லிக்கு மட்டுமல்ல தோசைக்கு கூட இந்த சாம்பார் செம சைடிஷ் ஆகத்தான் இருக்கும். ரெசிபி பிடிச்சிருந்தா, மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -