மனதில் இடம் இல்லை – காதல் கவிதை

Love kavithai

நீ இருந்த இதயத்தில்
வேறொருவருக்கு இடம்
கொடுப்பது பற்றி நான் இன்னமும்
யோசிக்கவில்லை..
ஆனால் என்னை விலகிச்சென்ற
உனக்கு இனி என் இதயம்
சொந்தமில்லை என்பதில்
தெளிவாய் இருக்கிறேன்..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
உன்னை காண காத்திருந்த நொடிகள் – காதல் கவிதை

காதலில் தோல்வியுற்ற ஒருவரின் இதயத்தில் மற்றொருவர் இடம் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு விடயம் அல்ல. அதே போல அவரக்ளும் தன் காதலனோ காதலியோ இருந்த ஒரு இடத்தில் மற்றவரை அவ்வளவு எளிதில் அமர்த்துவது இல்லை. ஏன் என்றால் அவர்களை பொறுத்தவரை காதல் என்பது ஒரு உயிர். அது பிரிந்துவிட்டால் திரும்ப வராது.

அதோடு காதலில் தோல்வியுற்றவர்களுக்கு மட்டும் தான் தெரியும், காதல் எவ்வளவு இன்பம் தருகிறதோ அதை விட பன்மடங்கு துன்பத்தையும் சில நேரம் தரவல்லது என்று. ஆகையால் மீண்டும் அந்த பந்தத்தில் இணைவதர்கு அவர்கள் மனம் அவ்வளவு எளிதில் சம்மதம் தராது. பாதிக்கப்பட்ட மனதிற்கு தானே தெரியும் அதன் வாலியும் வேதனையும்.

Love Kavithai image
Love Kavithai

காதல் பாடல் வரிகள், நட்பு பாடல் வரிகள், காதல் கவிதைகள் இப்படி அன்பு சார்ந்த பல தகவல்கள் இங்கு உள்ளன.