புதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை

Love kavithai

பூந்தோட்டமாய் இருந்த என் வாழ்வு
இன்று புதை குழியாய் மாறியது
அதில் இருந்த காதல் விதைகள் எல்லாம்
இன்று அழுதுகொண்டே புதைகிறது..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
உனக்கான காத்திருப்பு – காதல் கவிதை

இந்த உலகில் பிறந்த அனைவரின் வாழ்வும் ஆரம்ப கட்டத்தில் ஒரு பூந்தோட்டமாக தான் இருக்கும். காதலிக்க ஆரமித்து பிறகு அந்த பூந்தோட்டம் ஒரு நந்தவனமாக மாறும் என்பதே உண்மை. அந்த நந்தவனத்தில் உள்ள காதல் பூக்கள் ஒவ்வொன்றும் காதலுக்காக மட்டுமே பூக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் சில காரணங்களால சிலரது வாழ்வில் அந்த பூந்தோட்டம் ஒரு பாலைவனமாகவும் மாறுகிறது.

நந்தவனத்தில் வாழ்ந்தவனுக்கு பாலைவனத்தில் வாழ்வது எவ்வளவு கடினமோ அதை விட பன் மடங்கு கடினமானது இந்த காதல் பிரிவு. அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் அடக்க முடியாத வலி. அந்த வலியில் இருக்கும் ஒருவனுக்கு அனைத்தும் மாயையாய் தெரியும். அவன் காதலே அவனை கொள்வது போல கூட தோன்றும். அந்த காதல் மாயையில் இருந்து வெளிவர அவனுக்கு புது சக்தி வேண்டும் என்பதே உண்மை.

Love Kavithai Image
Love kavithai

நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகள், தோழன் தோழி கவிதை, பிரிவு சம்மந்தமான கவிதை என பல கவிதைகள் இங்கு உண்டு.