புரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை

Kadhal kavithai

கோபங்களும் கட்டுப்பாடுகளும்
என் அன்பின் வெளிப்பாடுகளே..
இதை நீ புரிந்துகொள்வாய்
என்று நினைத்தேன்..
ஆனால் நீயோ பிரிந்து சென்றாய்.

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
களவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை

காதலிக்கும் இவர்களுக்கு இடையே எப்போதும் ஒரு இனம் புரியாத நெருக்கம் இருக்கும். அந்த நெருக்கமே பல நேரங்களில் அவர்களுக்கு இன்னலை விளைவிக்கும். தன் காதலனோ காதலியோ தன்னோட மட்டும் தான் பேச வேண்டும், தன்னோடு மட்டும் தான் சிரிக்க வேண்டும் என்ற ஏக்கம் பொதுவாக பலரிடம் இருக்கும். அந்த என்கண்களே சில நேரங்களில் கட்டுப்பாடுகளாக மாறும்.

தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த கட்டுப்பாடுகளை சிலர் மீறுவர். அதன் காரணமாக காதல் யுத்தம் அரங்கேறும். அந்த யுத்தத்தின் இறுதியில் கட்டுப்பாடுகளை விதித்தவரே தோல்வியை தழுவி காதல் பிரிவில் ஏங்கி தவிப்பர். எதிர் முனையில் இருப்பவர் என்ன செய்வதென்று அறியாத ஏக்கத்தோடும் இனி அவர்களோடு சேரக்கூடாது என்ற வைராக்கியதோடும் வாழ பழகுவார்.

Love Kavithai Image
Love kavithai

காதல் கவிதைகள், காதல் பிரிவு கவிதைகள், மனதை உருக்கும் அன்பு கவிதைகள் என கவிதை தொகுப்பு பல இங்கு உள்ளது.