கடன்கள் முற்றிலும் தீர வியாழன் கிழமையில் இவருடைய சன்னிதியில் 27 மிளகுகளை இப்படி செய்தால் போதுமே!

ஒவ்வொருவருக்கும் கடன் பிரச்சினை என்பது மிகப்பெரிய பிரச்சனையாகவே இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது. கடன் வாங்கும் போது என்னவோ! அதனுடைய வலி புரிவதில்லை. ஆனால் அதை ஒவ்வொரு தவணையும் கட்டும் பொழுது மாதங்கள் என்னவோ மெதுவாக நகர்வது போல நமக்கு தோன்றிவிடுகிறது. 12 மாதங்கள் ஆவதற்கு, 12 வருடங்கள் ஆனது போல் ஒரு உணர்வு வந்துவிடும். இத்தகைய மன கவலைகளில் இருந்து விடுபட வைக்கக் கூடியவர் பைரவர் ஒருவரே ஆவார். பைரவரை வழிபடுவர்களுக்கு கடன் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. கடன் தீர அவரை எப்படி வழிபடலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

bairavar

தீராத கடன்கள் தீர கூடிய வாய்ப்புகள் பைரவரை வழிபடுவதன் மூலம் நமக்கு உண்டாகும் என்பது ஐதீகம். பைரவரை மனதில் நினைத்து வழிபட்டாலே, எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. நாயை தன்னுடைய வாகனமாகக் கொண்டுள்ள பைரவர் யம பயத்தை போக்க கூடியவர். இவரை வணங்குபவர்களுக்கு வாழ்க்கையில் பயம் என்பதே வருவதில்லை. எவரையும் எதிர்த்துப் போராடும் துணிச்சலை பெறுவார்கள்.

பகைவர்கள் தொல்லை நீங்கவும், கடன் பிரச்சினைகள் தீரவும், தீவிரமாக இவரை வழிபட செய்யலாம். பைரவருக்கு உகந்த நாள் வியாழன் கிழமை ஆகும். வியாழக்கிழமை தோறும் பைரவ வழிபாடு செய்வது விசேஷமான பலன்களை கொடுக்கும். மேலும் பைரவரை வழிபட அஷ்டமி நாட்களும் உகந்தவை ஆகும். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு சக்திகள் அதிகமாக இருக்கும். வளர்பிறை, தேய்பிறை ஆகிய அஷ்டமி நாட்களில் பைரவர் கோவில்களில் விசேஷமான ஏற்பாடுகள் செய்திருப்பார்கள்.

kaala bairavar

உங்களுக்கு இருக்கும் எல்லா பிரச்சனைகள் தீரவும், கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கவும், வியாழன் கிழமையில் பைரவர் சந்நிதிக்கு செல்லுங்கள். ஒரு புதிய மண் அகல் விளக்கு ஒன்று, கருப்பு துணி சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் 27 என்ற எண்ணிக்கையில் மிளகுகள், நல்லெண்ணெய் அல்லது நெய், வத்திப் பெட்டி கொண்டு செல்லுங்கள். மேலும் பைரவருக்கு உகந்த செவ்வரளி மலர்களை அர்ச்சனை செய்வதற்கு எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.

கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்து வந்த பின்னர், பைரவர் சன்னிதியில் நின்று பைரவருக்கு செவ்வரளி மலர்களை காலடியில் வையுங்கள். பின்னர் அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். சதுரமாக வெட்டிய கருப்பு துணியில் 27 மிளகுகளை போட்டு சிறிய முடிப்பாக முடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அந்த எண்ணெயில் போட்டு முழுவதுமாக எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள்.

el deepam

இதில் தீபமேற்றி பைரவருக்கு காண்பிக்க வேண்டும். உங்கள் கடன் தொல்லைகள் தீரவும், நோய் நொடிகள் அகலவும், மனபயம் நீங்கவும் மனதார பிரார்த்திக்க வேண்டும். பைரவர் அஷ்டகம் வாசிப்பது, ஸ்லோகங்கள் சொல்லுவது செய்ய வேண்டும். அரளி மலர்களை பைரவருக்கு அர்ச்சிக்க செய்ய வேண்டும். இதுபோல் தொடர்ந்து ஏழு முறை செய்து வந்தால் தீராத கடன் தொல்லையும் தீர்ந்து விடுவதாக நம்பிக்கை உள்ளது.