கடன் தீர ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் வழிபாடு

pillaiyar
- Advertisement -

பூத கணங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பதால், இவரை கணநாதன் என்று சொல்கிறார்கள். உங்கள் கழுத்தை நெரிக்கும் கடனை, கணப்பொழுதில் அதாவது நொடி பொழுதில் போக்கக்கூடிய சக்தியும் இந்த விநாயகப் பெருமானுக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை விநாயகரை இப்படி வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய கடனையும் நொடி பொழுதில் அடைத்து விடலாம். அந்த பரிகாரம் என்ன தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடன் தீர்க்கும் விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நீங்கள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். வீட்டில் இருந்து செல்லும்போது ஒரு கைப்பிடி அளவு கொள்ளு எடுத்து செல்லுங்கள். கொண்டு போன கொள்ளை விநாயகரது பாதங்களில் வைத்து விடுங்கள். விநாயகரை வணங்கி விட்டு, விநாயகருக்கு அருகம்புல்லை சாத்திவிட்டு, விநாயகரை மூன்று முறை வளம் வாங்க.

- Advertisement -

பிறகு விநாயகரது பாதத்தில் வைத்த கொள்ளை உங்களுடைய கையில் எடுத்துக் கொள்ளுங்கள். வலது கையில் எடுத்த கொள்ளை உங்களுடைய தலையை மூன்று முறை சுற்ற வேண்டும். எப்படி தெரியுமா? இடது பக்கமாக மூன்று முறை சுற்ற வேண்டும். அதாவது ஆன்டி கிளாக் வைஸ் உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

அப்ரத்ஷனமாக உங்கள் தலையை மூன்று முறை சுற்றி விட்டு, இந்த கொள்ளை விநாயகர் சன்னிதானத்திலேயே ஏதாவது ஒரு மரத்தடியில் தூவி விட்டு வர வேண்டும். விநாயகர் கூரையின் மேலே தூவி விட முடியும் என்றாலும் அதை நீங்கள் தூவலாம். இதை காக்கை குருவிகள் வந்து உண்ணும்.

- Advertisement -

குறிப்பாக இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரமான 12:00 மணி முதல் 1:30 வரை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்து வந்தால், உங்கள் கடன் பிரச்சனை காணாமலேயே போய்விடும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் தீர்க முடியாத பணக்கஷ்டத்தில் அவதிப்படுபவர்கள் இதை செய்யுங்கள்.

உங்களுடைய வருமானம் பெருகும். கடன் குறையும். செல்வ செழிப்போடு வாழ்வதற்கு உண்டான வழியும் கிடைக்கும். விநாயகர் பெருமானது பாதத்தை நம்பிக்கையோடு பற்றியவர்களுக்கு ஏமாற்றம் கிடையாது. உங்களால் முடிந்தால் ஞாயிற்றுக்கிழமையே இந்த கொள்ளை சுண்டலாக செய்து ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்திற்கு தானமாக கொடுங்க, அல்லது முதியோர் இல்லத்திற்கு தானமாக கொடுங்க.

இதையும் படிக்கலாமே: 11.04.2024 இன்று பங்குனி கிருத்திகை வழிபாடு

இல்லையா இந்த சுண்டலை கொண்டு போய் நீங்களே கோவில் வாசலில் யாசகம் கேட்பவர்களுக்கு சின்ன சின்ன தொண்ணையில் வைத்து பிரசாதமாக கொடுத்து விடுங்கள். கடன் கரையை எத்தனையோ பரிகாரங்களை தேடி தேடி செய்வோம். ஆனால் நம் வீட்டு பக்கத்தில் இருக்கும், நம் தெரு முனையில் இருக்கும் பிள்ளையாரை வழிபாடு செய்ய மறந்து இருப்போம். நம்பிக்கையோடு இதை செய்யுங்கள். உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -