‘கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்’ என்றால் ஏன் கோவிலுக்கு செல்கிறோம் தெரியுமா?

pillaiyar-prayer
- Advertisement -

புராணங்களின் படி பக்த பிரகலாதன் நாராயணன் மீது கொண்ட பக்தியினால், அவர் மீது கொண்ட பேரன்பினால் இந்த உலகத்திற்கு உணர்த்தியது ‘கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’ என்பது தான். எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் கடவுளை ஏன் எந்த ஒரு பொருட்களிலும் காண முடியாமல், கோவிலை தேடி செல்கிறோம்? என்கிற கேள்விக்கான விடையை தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக தகவலாக நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர் ஒருவரே கடவுள் என்று அனைவரும் அறிந்தது தான். ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு விஷயங்களும், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் யாவும் இறைவனால் படைக்கப்பட்டவை. மனிதன் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தாலும், அந்த விஷயத்தை கண்டுபிடிப்பதற்கான ஆதாரத்தை கொடுத்தது கடவுள்தான்.

- Advertisement -

இப்படி எல்லாவற்றையும் கொடுத்த கடவுள் எல்லாவற்றிலும் நிறைந்திருந்தாலும் அவரை நாம் உணராதவரை நம்மால் கடவுளை நெருங்க முடியாது என்பது தான் சாஸ்திர உண்மையாகும். உண்ணாமல் விரதம் இருந்தால் எனக்கு இது நடக்கும் என்று ஒருவர் உண்மையிலேயே நம்பும் பொழுது தான் அவருக்கு அந்த விஷயம் கிடைக்கப் பெறுகிறது. அதற்கு காரணம் அவர்கள் கடவுளை அங்கு உணர்கின்றனர். நீ சாப்பிடாமல் இருந்தால் உனக்கு கடவுள் நீ கேட்டதை கொடுத்து விடுவாரா? அதெல்லாம் சுத்த மூடநம்பிக்கை என்று கூறுபவர்களால் கடவுளை உணர முடிவது இல்லை. அப்படி இருக்கும் பொழுது உணராத கடவுள் எப்படி உங்களுக்கு உதவி செய்ய முடியும்? கடவுளை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அவரை சரணடையவும், வேண்டியதை பெறவும் மனதளவில் நம்பிக்கை பிறக்கும்.

ஒரு பரிகாரத்தை ஒரு ஜோதிடர் கூறுகிறார் என்றால் அதை நீங்கள் நம்பி செய்ய வேண்டும். அவர் கூறி விட்டாரே என்று செய்யக்கூடாது. உண்மையிலேயே அங்கு நீங்கள் கடவுளை உணர்ந்து, கடவுளுக்கு நீங்கள் மனம் உவந்து செய்யும் பொழுது தான் உங்களுக்கு அதற்குரிய பலன்களும் கிடைக்கிறது. அதேபோல தான் எந்த ஒரு பொருளிலும் நீங்கள் கடவுளை உணர்ந்தால் மட்டுமே அந்த பொருளில் கடவுள் இருப்பதை பார்க்க முடிகிறது.

- Advertisement -

நம் வீட்டில் நிறைய பொருட்களில் கடவுள் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி எந்த பொருட்களிலும் நாம் இதுவரை கடவுளை உணர்ந்தது கிடையாது. ஆனால் கோவிலுக்கு செல்லும் பொழுது மட்டும் ஒரு விதமான அதிர்வலைகள் நமக்குள் எழுவதையும், மனமுருகி வேண்டுவதையும், கண்களில் கண்ணீர் வழிவதையும் காண முடிகிறது. ஏனென்றால் அங்கு கடவுள் தத்துரூபமாக சிலை வடிவமாக அமர்ந்து கொண்டிருப்பார். அவர்களை பார்க்கும் பொழுதே நமக்கு கடவுள் இருக்கிறார் என்கிற உணர்வு வந்து விடுகிறது. அதனால் தான் கோவிலில் அந்த அதிர்வலைகள் உண்டாகின்றன. இந்த எண்ணத்தை உருவாக்கும் தெய்வீக அதிர்வலைகள் கோவிலில் நிறைந்துள்ளதால் மட்டுமே கோவிலில் நம்மால் கடவுளை உணர முடிகிறது. மற்ற பொருட்களில் கடவுளை உணர்ந்தாலும், நம்மால் கடவுளை அங்கு காண முடியும்.

இந்த கோவிலுக்கு சென்றால் இந்த விஷயம் நடக்கும். அந்த கோவிலுக்கு சென்று இதை செய்தால் அந்த விஷயம் நடக்கும் என்றெல்லாம் பரிகாரங்களும், வழிகாட்டுதலும் இந்து மதத்தில் கூறப்படுவது உண்டு. கடவுளை உணரவும், உணர வைக்கவும் உரிய சக்தி அந்த கோவில்களில் இருப்பதால் தான் அவ்வாறு கூறப்படுகிறது. நீங்கள் வீட்டிலேயே அமர்ந்து எந்த ஒரு கடவுளுடைய படமோ, விக்ரஹமோ கூட இல்லாமல் வெறுமனே ஒரு விஷயத்தை செய்ய சொன்னால் செய்வீர்களா? அல்லது அந்த இடத்தில் உங்களால் கடவுளை உணர முடியுமா? முடியவே முடியாது அல்லவா? அவ்வளவுதான் விஷயம். எந்த இடத்தில் நீங்கள் கடவுளை உணர்ந்து, அவருக்காக நீங்கள் ஒரு விஷயத்தை செய்கிறீர்களோ, அங்கு உங்களுக்கு உரிய கடவுள் அருள் புரிவார், அருள் புரிவதாக நீங்கள் நம்புவீர்கள், அது நடக்கவும் செய்கிறது.

- Advertisement -