தாளிக்க கூட வேண்டாம், தக்காளியும் வேண்டாம் சுவையான காரச் சட்னி 10 நிமிடத்தில் எப்படி செய்வது?

onion-kara-chutney_tamil
- Advertisement -

சட்னி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காரச் சட்னி தான். இந்த காரசாரமான சட்னிக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். மற்ற சட்னி வகைகளை விட, கார சட்னி அரைத்து கொடுத்தால் இரண்டு இட்லி கூடுதலாக சாப்பிடுவார்கள். எல்லோருக்கும் பிடித்த இந்த கார சட்னிக்கு தாளிக்க கூட தேவையில்லை. தக்காளி கூட சேர்க்க தேவையில்லை. இந்த கார சட்னி எப்படி சுவையாக அரைக்கலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கார சட்னி அரைக்க தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 30, பூண்டு பற்கள் – பத்து, வர மிளகாய் – 10, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, மல்லித் தழை – ஒரு கைப்பிடி, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

காரச் சட்னி அரைக்க செய்முறை விளக்கம்:
தக்காளி சேர்க்காமல் கார சட்னி அரைக்க பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் பயன்படுத்துவது தான் நல்லது. எனவே 30 சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் உளுந்து மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். இவை வறுபடும் பொழுது காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சுருண்டு வதங்கி வரும் பொழுது ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ்ஷான பச்சை கருவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு வதக்குங்கள். கடைசியாக ஒரு கைப்பிடி அளவிற்கு மல்லி தழைகளை எடுத்து சுத்தம் செய்து சேருங்கள். இதனுடன் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு முறை நன்கு பிரட்டி விட்டு, அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். வதக்கிய பொருட்கள் ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் முதலில் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பசங்களுக்கு நீங்க என்ன லஞ்ச் குடுத்தாலும், சைடு டிஷ்ஷா இந்த காலிஃப்ளவர் ஃப்ரையை இப்படி பண்ணி கொடுங்க, கொஞ்சம் கூட சாதம் மிச்சம் வராது. நல்ல மொறு மொறு சைடு டிஷ்.

பின்னர் கொஞ்சம் போல தண்ணீர் விட்டு அரையுங்கள். இப்போது ஒரு பாத்திரத்திற்கு இதை மாற்றிக் கொள்ளுங்கள். கெட்டியாக இருக்கும் இந்த காரசாரமான சின்ன வெங்காய கார சட்னி ரொம்பவே சுவையாக இருக்கும். இதற்கு தாளிக்கக் கூட தேவையில்லை, அப்படியே இட்லி, தோசை, பணியாரத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இந்த ஒரு காரச் சட்னி ரெசிபி வைத்துக் கொடுத்தால் நாலு இட்லி சாப்பிடுபவர்கள், ஆறு இட்லி கூட சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்திடுங்க.

- Advertisement -