கார வேர்கடலை சட்னி இப்படி மட்டும் ஒருமுறை செஞ்சு பாருங்க கூட ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவீங்க!

verkadalai-chutney
- Advertisement -

காரசாரமான கார சட்னி செய்வது போலவே வேர்க்கடலை போட்டு செய்து பாருங்கள், இன்னும் டேஸ்டாக இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள விதவிதமான சட்னி வைத்துக் கொடுத்துப் பாருங்கள் எக்ஸ்ட்ரா ரெண்டு சாப்பிடுவார்கள். அந்த வகையில் சூப்பரான கார வேர்கடலை சட்னி சுவையாக எளிதாக எப்படி வீட்டிலேயே செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

கார வேர்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 100g, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – இரண்டு, வரமிளகாய் – 5, கறிவேப்பிலை – இரண்டு கொத்து, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், வர மிளகாய் – ரெண்டு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கார வேர்கடலை சட்னி செய்முறை விளக்கம்:
கார வேர்கடலை சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கப் வேர்க்கடலையை வெறும் வாணலியில் போட்டு நன்கு சூடு பறக்க வறுத்துக் கொள்ளுங்கள். கருகி விடக்கூடாது பொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனால் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கை பொறுக்கும் சூட்டில் பரப்பரவென தேய்த்து விட்டால் தோல் தனியாகவும், வேர்க்கடலை தனியாகவும் பிரிந்து வந்து விடும். அதன் பிறகு ஆற வைத்து ஒரு ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இது நீண்ட நாட்களுக்கு அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது கார வேர்கடலை சட்னி செய்ய தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். அது படபடவென பொறிந்ததும், காம்பு நீக்கிய வரமிளகாயை உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்து லேசாக ஒரு நிமிடம் வதக்குங்கள். பின் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேருங்கள். வெங்காயம் லேசாக கண்ணாடி பதம் வர வதங்கியதும், தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் மற்றும் தக்காளி முக்கால் பாகம் நன்கு மசிய வதங்கியதும் நீங்கள் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து ரெண்டு நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு இறுதியாக ஒரு துண்டு சிறு நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இவற்றை ஆறியதும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்!

இதற்காக அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு வரமிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை இதில் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். ரொம்ப சூப்பரான இந்த காரசாரமான வேர்க்கடலை கார சட்னி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, எல்லா விதமான டிபனுக்கும் சூப்பராக இருக்கும்.

- Advertisement -