காரியத் தடை நீங்க நரசிம்மர் வழிபாடு

narachimmar atchathai
- Advertisement -

தெய்வங்கள் எல்லாமே நாம் சோர்ந்து நிற்கும் வேளையிலும் கலங்கி நிற்கும் நேரத்திலும் நமக்காக வந்து நின்று நம்மை காப்பவர்கள். அதிலும் சில தெய்வங்கள் நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு அருள் புரிய கூடியவர்கள். அப்படியான சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒருவர் தான் நரசிம்மர். இந்த நரசிம்மரை நாம் எப்படி வழிபாடு செய்தால் நம்முடன் அவர் எப்போதும் இருந்து அருள் புரிவார் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துன்பம் தீர நரசிம்ம வழிபாடு

மகா விஷ்ணுவின் அம்சமான நரசிம்மர் சிறிய குழந்தையான பிரகலநாதன் கூப்பிட்ட குரலுக்கு வந்து நின்று காட்சி தந்து அருள் புரிந்தார். அப்படியான தெய்வத்தை நாமும் மனதார வணங்கினால் நம்முடைய துன்பத்திலும் துயரத்திலும் வந்து நின்று நம்மை காப்பார்.

- Advertisement -

இந்த நரசிம்மர் வழிபாட்டை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். இதை செய்வதற்கு முன்பாக காலையில் குளித்து முடித்த பிறகு எப்பொழுதும் போல பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு தட்டில் கொஞ்சம் பச்சரிசி, சுத்தமான மஞ்சள் கொஞ்சம் பன்னீர் ஊற்றி அட்சதயாக தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த அட்சதையை உங்கள் வலது கையில் வைத்து இடது கை கொண்டு அதன் மேல் மூடி கண்களை மூடி பூஜையறையில் அமர்ந்து கொண்டு ஓம் நரசிம்மராய நமக என்ற மந்திரத்தை உங்களால் எத்தனை முறை ஜெபிக்க முடியுமோ சொல்லுங்கள். அதன் பிறகு இந்த அட்சதையை ஒரு பேப்பரில் மடித்து உங்களுடைய பாக்கெட் மணிபர்ஸ் என எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் வெளியில் வேலைக்கு செல்பவர் செல்லலாம் அல்லது வேறு பணி நிமித்தமாக செல்பவரும் சொல்லுங்கள். இந்த ஒரு பொருள் உங்களிடம் இருக்கும் போது நரசிம்மரே உங்களுடன் இருப்பது போன்ற உணர்வு உங்களிடம் இருக்கும். இதனால் மனதில் பய உணர்வு நீங்கி ஒரு தைரியம் பிறக்கும். நீங்கள் போகும் காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தீபாவளி அன்று உடன் பிறப்புகளுக்கு வாங்கித் தர வேண்டிய பொருள்

வேலை முடிந்து மாலை வீடு திரும்பும் போது இந்த அட்சதையை நீங்கள் வீட்டுக்குள் வரும் முன்னரே வீட்டின் அருகில் கால் படாத இடமோ அல்லது செடி இருக்கும் இடத்தில் போட்டு விடுங்கள். இதை தினம் தினம் செய்யும் போது உங்களுடைய ஒவ்வொரு நாளும் அற்புதமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. நரசிம்மரை இப்படி எளிமையான முறையில் வழிபட்டு அவருடைய அருளாசியை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -