தினமும் 1 கற்பூரத்தை வீட்டில் இப்படி ஏற்றினால், கஷ்டங்கள் கரைந்து போகும். வீட்டில் நல்லது மட்டுமே நடக்கும்.

sudam

நம்முடைய வீட்டில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்றால் தினம் தினம் தீபம் ஏற்றி, தினம் தினம் கற்பூர ஆரத்தியை அந்த இறைவனுக்கு காண்பித்து, உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு இறைவழிபாடு செய்தாலே போதும். இருளில் இருக்கும் நம்முடைய வாழ்க்கை பிரகாசமாக மாறிவிடும். ஆனால் சில பேருக்கு கஷ்டங்கள் என்பது தொடர்கதை போல தொடர்ந்து கொண்டே வரும். இறைவழிபாடு பூஜை புனஸ்காரங்கள் செய்து, வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்க வில்லை, கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் பின் சொல்லப்படும் பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பலனடையலாம்.

poojai

தினமும் இந்த பரிகாரத்தை உங்களால் காலை 6 மணிக்கு செய்ய முடியும் பட்சத்தில் காலை நேரத்தில் செய்யலாம். முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு செய்யலாம். இந்த பரிகாரத்திற்க்கு ஒரு மண் அகல் விளக்கு, கற்பூரம், சுத்தமான தேன் இந்த 3 பொருட்கள் கட்டாயம் தேவை காலையோ அல்லது மாலை நேரத்தில் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வையுங்கள். வாசனை மிகுந்த தூபங்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து விட்டு, இந்த பரிகாரத்தினை செய்ய தொடங்க வேண்டும்.

பூஜை அறையில் தரையில் அகல் விளக்கை வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பழைய மண் அகல் விளக்காக இருந்தாலும் அதை சுத்தமாக கழுவி துடைத்து உலர வைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். பூஜையறையில் தயாராக இருக்கும் மண் அகல் விளக்கில் ஒரு கற்பூரத்தை வைத்து சூடத்தை ஏற்றி விடுங்கள்.

sudam

எரிகின்ற சூடத்தின் முன்பாக அமர்ந்து உங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை மனதார இறைவனிடம் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இந்த வேண்டுதல் இருக்க வேண்டும். வேண்டுதலை இறைவனிடம் சொல்லி முடித்துவிட்டு, ஒரு சொட்டு தேனினை அந்த கற்பூரத்தில் விடவேண்டும். உடனே அந்த கற்பூரம் குளிராது. சிறிது நேரம் எரிந்து அதன் பின்பு தானாக கற்பூரம் குளிந்துவிடும். அதுவரை நீங்கள் பூஜை அறையிலேயே அமர்ந்து மனதார இறைவழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இறுதியாக பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய கஷ்டங்களை உங்களுடைய குலதெய்வத்திடமும், அந்த அக்னி பகவானிடமும் மனம் உருகி சொல்லிவிட்டீர்கள். அந்த கஷ்டம் இனிதே நிறைவேற வேண்டும் என்பதற்காக தேனையும் சமர்ப்பணம் செய்து இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட ஒரு யாகம் வளர்த்தியதற்க்கு சமம் இந்த வழிபாட்டு முறை.

honey 1

இந்த வழிபாட்டு முறையினை இத்தனை நாட்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. தொடர்ந்து 48 நாட்கள் உங்கள் வீட்டு பூஜை அறையில் இப்படி உங்களுடைய வேண்டுதலை, ஒரு கற்பூரத்தை ஏற்றி வைத்து, சொல்லிக் கொண்டே வரும் பட்சத்தில், நிறைவேறாத எவ்வளவு பெரிய வேண்டுதலும் நிறைவேறும். உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாக குறையத் தொடங்கும்.

vilakku-pray

இந்த பூஜையை தொடங்கி விட்டீர்கள். 48 நாட்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. 11 நாட்கள், 21 நாட்கள் இப்படி உங்களுடைய வசதிக்கு ஏற்ப இந்த பரிகாரத்தை செய்தாலும் அதன் மூலம் தவறு ஒன்றும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நிச்சயமாக பரிகாரத்தை தொடங்கிய சில நாட்களிலேயே உங்களுடைய வீட்டில் நல்ல மாற்றம் கிடைப்பதை உணரமுடியும்.