சமையலறையில் இருக்கும் அரிசி பானையில், இந்த நாணயத்தை புதைத்து வைத்தால், வீட்டில் செல்வ வளம் ஒரு போதும் குறையாமல் வளர்ந்து கொண்டே செல்லும்.

arisi

ஒரு வீடு என்றால், அது செல்வ வளத்தோடு இருக்கவேண்டும். செல்வவளம் என்பது வெறும் பணம் காசை மட்டும் குறிப்பது கிடையாது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி இருக்கக்கூடாது. மனநிம்மதி இருக்கவேண்டும். தன தானியத்திற்கு பஞ்சம் இருக்கக்கூடாது. நன்றாக பசி எடுத்து சாப்பிடும் அளவிற்கு சந்தோஷம் இருக்க வேண்டும். முக்கியமாக படுத்தால் தூக்கம் வரவேண்டும். குடும்பத்தில் உள்ள உறவுகளில் ஒற்றுமை இருக்க வேண்டும். இப்படியாக பணத்தைத் தவிர, மேலும் சில நன்மைகள் எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு சிறந்த குடும்பமாக இருக்க முடியும்.

pachcharisi

மேலே சொல்லப்பட்டுள்ள மற்ற சந்தோஷங்கள் எல்லாம் நமக்கு நிலையாக கிடைக்க வேண்டும் என்றால், அதற்குக் காரணமாக இருப்பது பணம் தான். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அந்த பணம் நேர்மையான முறையில் நாம் சம்பாதித்த, நமக்கான படமாக இருக்க வேண்டும்.

ஒரு வீட்டில் செல்வம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றாலும், அந்த செல்வவளம் ஒரு துளி அளவும் குறையாமல் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும் என்றாலும், நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்றாலும் சுலபமான முறையில் என்ன வழிபாடு செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vilakku-cash

நீங்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை வைத்திருப்பீர்கள் அல்லவா? அந்த பழக்கம் உங்களிடம் இல்லை என்றாலும், இனிமேல் வர வைத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது. இப்படியாக குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது, 9 ‘ஒரு ரூபாய்’ நாணயங்களை, ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

இந்த ஒன்பது, ஒரு ரூபாய் நாணயங்களை நவகிரகத்தின் பெயரைச்சொல்லி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் கிரகங்கள் தான் நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கிறது. இந்த கிரகங்களின் மூலம் நம்முடைய வீட்டிற்கும், நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற வேண்டுதலையும் வைக்க வேண்டும்.

money

உங்கள் குலதெய்வத்தை தரிசனம் செய்யும்போது உங்கள் கையில் இந்த முடிச்சு இருக்கவேண்டும். கோபுர தரிசனம் செய்யும் போதும் இந்த முடிச்சு உங்கள் கையில் இருக்க வேண்டும். அந்த கோபுரத்தின் நிழல் உங்கள் கையில் இருக்கும் இந்த முடிச்சின் மேல் பட்டால் மிகவும் நல்லது. கொடிமரத்தின் பாதங்களில் இந்த முடிசை வைத்து, நமஸ்காரம் செய்து கொண்டு பயபக்தியோடு அதை மீண்டும் உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வாருங்கள்.

money2

உங்கள் குலதெய்வம் எந்த குலதெய்வமாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். தவறு கிடையாது. வீட்டிற்கு கொண்டு வந்த இந்த முடிச்சுகளை பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்து, 3 நாணயத்தை எடுத்து அரிசி வைத்திருக்கும் மூட்டையிலோ அல்லது ட்ரமிலோ புதைத்து வைத்து விடலாம். மற்ற நாணயங்களை எடுத்து பருப்பு வகைகள் நிரப்பி வைத்திருக்கும் டப்பாக்கள், தானியங்கள் நிரப்பி வைத்திருக்கும் டப்பாக்கள் இப்படி உங்கள் சமையல் அறையில் எந்த பொருட்கள் எல்லாம் அதிக அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ அதில் ஒவ்வொரு நாணயத்தை போட்டு வைத்துக் கொள்ளலாம்.

silver-box

இந்த நாணயம் உங்களுடைய வீட்டிலிருக்கும் செல்வ வளத்தை உயர்த்தும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. ஒரு மஞ்சள் துணியில் முடிந்து ஒரு நாணயத்தை பணம் வைக்கும் இடத்திலும் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறாக நம்பிக்கையோடு குலதெய்வத்தை வேண்டி வைக்கக்கூடிய இந்த நாணயங்களுக்கு சக்தி மிக அதிகம். ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து நல்ல மாற்றத்தை உணர்ந்தால் தான் அது உங்களுக்கு புரியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பிரம்ம முகூர்த்த நேரத்தில் இப்படி வழிபாடு செய்தால் பலன் இல்லை. குளிக்காமல் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தால் முழு பலனையும் நம்மால் பெற முடியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.