படிப்பே ஏறாத குழந்தைகள் கூட படிப்பில் சிறந்து விளங்க புதன்கிழமை தோறும் இந்த வழிபாட்டை தாய்மார்கள் மேற்கொண்டாலே போதும். தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

puthan students
- Advertisement -

கல்விக்கு அதிபதியாக விளங்கக்கூடிய தெய்வம் சரஸ்வதி தேவி ஆவாள். கிரகங்களின் அடிப்படையில் நவகிரகங்களில் கல்வியை நமக்கு தரக்கூடிய கிரகமாக கருதப்படுபவர் புதன் பகவானே. புதன் பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் பட்சத்தில் நமக்கு பல நன்மைகள் ஏற்படும். அப்படிப்பட்ட புதன் பகவானை புதன் கிழமை தோறும் எவ்வாறு வழிபட்டால் நம் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

புத்தி காரகனாக திகழக்கூடியவர் புதன் பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவானின் ஆதிக்கம் இருக்கும் பட்சத்தில் அவர் புத்தி கூர்மையுடன் திகழ்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் அவர் கல்வியில் சிறந்து விளங்குவார் என்றும் கூறப்படுகிறது. அறிவு சார்ந்த அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். இதே புதன் பகவானால் பாதிப்புகள் இருப்பின் இவை அனைத்தும் எதிர்மறையாக மாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

குழந்தைகள் நன்றாக படிக்க
புதன் பகவான் பாதக சூழலில் இருக்கும் பொழுது, அவரை வழிபட்டு அவருடைய அருளை நாம் பெறுவதன் மூலம் அவர் நமக்கு சாதகமாக இருப்பார். புதன் பகவானை நாம் கோவிலுக்கு சென்று தான் வழிபட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. நம் வீட்டிலேயே நாம் அவரை வழிபடலாம். புதன் பகவானை நாம் வழிபடுவதற்கு புதன்கிழமையே சிறந்த கிழமை ஆகும். புதன்கிழமை அன்று புதன் ஹோரை இருக்கும் நேரத்தில் அதாவது காலை 6 முதல் 7 வரை மற்றும் இரவு 8 முதல் 9 வரை இந்த நேரத்தில் புதன் பகவானை வழிபட வேண்டும். முடிந்த அளவு காலையிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

வீட்டை சுத்தம் செய்து நீராடி முடித்து வீட்டு பூஜை அறையில் ஒரு நெய் அகல் தீபம் ஏற்ற வேண்டும். புதன் பகவானுக்கு பிடித்த உலோகமாக வெண்கலம் இருக்கிறது. ஆதலால் வெண்கல தாம்பாளத்தில் அந்த அகல் விளக்கை ஏற்றினால் அது மிகவும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும். இந்த தீபத்தை மலர்களால் அலங்கரித்து சிறிது மஞ்சள் கலந்த பச்சரிசியை அதாவது அட்சதையை போட வேண்டும். புதன் பகவானுக்கு பிடித்த தானியமாக பச்சை பயறு திகழ்கிறது. இந்த பச்சை பயரை வைத்து ஏதாவது ஒரு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். பிறகு புதன் பகவானிடம் நம்முடைய கோரிக்கையை வைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு புதன் பகவானுக்குரிய ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

- Advertisement -

புதன் பகவான் ஸ்லோகம்:
“இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தருள்வாய் பன்னொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி”

இந்த ஸ்லோகத்தை 9 முறையோ அல்லது 21 முறையோ கூற வேண்டும். இவ்வாறு கூறுவதன் மூலம் புதன் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து, கல்வியில் சிறந்து விளங்குவோம். தாய்மார்கள் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புத்தி கூர்மை ஏற்படும். தொழிலில் எந்தவித தடைகளும் இன்றி லாபங்கள் கிடைக்கும். திருமண தடை அகலும்.

இதையும் படிக்கலாமே: மாவிளக்கு தீபம் ஏற்றும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இந்த தெய்வத்திற்கு இந்த நாளில் மாவிளக்கு தீபத்தை ஏற்றி வழிபட்டு பாருங்கள். உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும்.

புதன் பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்கு புதன்கிழமை காலையில் ஒரு கைப்பிடி அளவு பச்சைப்பயிரை எடுத்து 27 முறை தலையை சுற்றி, அந்த பச்சை பயிரை தண்ணீரில் போட்டு வேக வைத்து சுண்டல் செய்து அருகில் இருக்கும் பசு மாட்டிற்கு கொடுத்து வர தோஷங்கள் விலகும். தடைகள் தவிடு பொடியாகும்.

- Advertisement -