இப்படி ஒரு சாஃப்டான சப்பாத்தியை தலைகீழா நின்னாலும் நம்மால் செய்ய முடியாது. மீதமான சாதத்தை வைத்து சூப்பர் சாஃப்ட் சப்பாத்தி ரெசிபி இதோ உங்களுக்காக.

rice-chappathi
- Advertisement -

சப்பாத்தி மாவை எப்படி தான் பிசைந்தாலும் சப்பாத்தி மிருதுவாக வரப்போவது இல்லை. சப்பாத்தி ரொம்பவும் வரட்டி போல, வரவரன்னு இருக்கிறது என்பவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய வீட்டில் சாதம் மீந்துவிட்டால், அதை தூக்கி இனிமேல் கீழே கொட்டாதிங்க, வீணாக்காதீர்கள். இந்த முறையில் சப்பாத்தி சுட்டு சாப்பிடுங்க. சப்பாத்தியும் சாஃப்டா வரும். அதேசமயம் சாப்பாடு வீணாகாது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இந்த அழகான ஒரு ரெசிபியை தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வம் உள்ளதா வாங்க பார்க்கலாம்.

செய்முறை

மீதமான சாதம் 1 கப் அளவு இருந்தால், அதே 1 கப் அளவு கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கப் கோதுமை மாவு, 1 கப் மீதமான சாதம், உப்பு தேவையான அளவு, போட்டு இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு முதலில் மிக்ஸியை பல்ஸ்மோடில் விட்டு விட்டு ஓட விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு மிக்ஸி ஜாரை திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை ஒரு முறை கலந்து விட்டு மிக்ஸியை மீண்டும் ஓட விட்டால் சாதம் அரைபட்டு, கோதுமை மாவோடு கலந்து ஒரு கலவை பிசுபிசுப்பாக நமக்கு கிடைக்கும்.

அதை அப்படியே ஒரு அகலமான பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இதோடு இன்னும் கொஞ்சம் கோதுமை மாவை சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைய வேண்டும். மாவு லேசாக பிசுபிசுப்பு தன்மையோடு தான் இருக்கும். நான் மறைத்த இந்த மாவு, சப்பாத்தி மாவு பதத்திற்கு சரியான பக்குவத்தில் கிடைக்க வேண்டும் என்றால், இதில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை விட்டு மீண்டும் பிசைந்து, அழகாக உருட்டிக் கொள்ளுங்கள். இதன் மேலே எண்ணெய்யை தடவி ஒரு மூடி போட்டு 1 மணி நேரம் ஊற விடுங்கள். சூப்பரான மாவு சப்பாத்தி செய்ய நமக்கு தயாராக இருக்கும்.

- Advertisement -

வழக்கம்போல இந்த மாவிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை சப்பாத்தி பலகையில் வைத்து மெல்லிசாக தேய்க்க வேண்டும். அதாவது ரொம்பவும் மெல்லிசாக இல்லாமல் ரொம்பவும் தடிமனாக இல்லாமல் சரியான அளவு தேயுங்க.

பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து, கல் நன்றாக சூடானதும் திரட்டிய சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு சுட்டு எடுக்க வேண்டும். இரண்டு பக்கமும் சப்பாத்தியை சிவக்க வைத்து இறுதியாக நெய் அல்லது எண்ணெய் தடவி பரிமாறினால் சாப்ட் ஆன சப்பாத்தி ரெடி. சாதம் சேர்க்காமல் என்னதான் சப்பாத்தி செய்தாலும் கூட உங்களுக்கு இத்தனை சாப்ட் கிடைக்காது.

- Advertisement -

சாதம் சேர்த்து சப்பாத்தி செய்யும்போது அத்தனை சாஃப்டா ஒரு சப்பாத்தி கிடைத்திருக்கும். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, தக்காளி பஜ்ஜி இப்படி எதாவது வைத்துக் கொள்ளுங்கள். ரெசிபி பிடிச்சிருக்கா. மீதமான சாதம் இனி வீணாகாது. ரெசிபி பிடிச்சிருக்கா. ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: சப்பாத்தியை கல்லில் போட்டவுடன் எண்ணெய் ஊற்றி எப்போதுமே சுடக்கூடாது. அப்படி சுட்டால் சப்பாத்தி ஆறிய பிறகு ரொம்பவும் வறண்டு போய்விடும். சப்பாத்தியை இரண்டு பக்கமும் சிவக்க விட்ட பின்பு தான் எண்ணெயோ நெய்யோ தடவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: ராத்திரிக்கு என்ன டின்னர் செய்யறதுன்னு குழப்பமா இருக்கா? கோதுமை மாவு இருந்தா போதுமே! டக்குனு இந்த புதுவிதமான கோதுமை ஊத்தப்பம் தயார்.

அதேசமயம் தோசை கல்லு நன்றாக சூடாவதற்கு முன்பே சப்பாத்தியை போட்டாலும், அடுப்பை ரொம்பவும் சிம்மில் வைத்து சப்பாத்தியை சுட்டாலும் சப்பாத்தி சாப்டாக கிடைக்காது. கல் நன்றாக ஆவி பறக்க காய்ந்திருக்கும் போது, சப்பாத்தியை போட்டு சுட்டெடுத்தால் சப்பாத்தி சாப்பிட்டாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் உங்க வீட்லயும் சாஃப்டான சப்பாத்தி கிடைக்கும்.

- Advertisement -