காரசாரமான மதுரை கார சட்னி 10 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்க, உங்களுக்கு 10 இட்லி கூட பத்தவே பத்தாது.

madurai-kara-chutney
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகள் இருந்தாலும் நமக்கு மிகவும் பிடித்தது காரச் சட்னி தான். இட்லியுடன் காரச் சட்னி காம்பினேஷன் அட்டகாசமானது. அதிலும் குறிப்பாக இந்த மதுரை கார சட்னி, சுவையில் அடிச்சிக்கவே முடியாது. சின்ன வெங்காயம் கொண்டு செய்யப்படும் எந்த வகையான சட்னியாக இருந்தாலும் பொதுவாக சூப்பராக இருக்கும். அதிலும் கார சட்னி செய்யும் பொழுது சொல்லவே வேண்டாம். ரொம்ப ரொம்ப சுலபமா பத்தே நிமிடத்தில் மதுரை கார சட்னி செஞ்சி அசத்திடலாம்! அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

dry-chilli-milagai

‘மதுரை கார சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், வர மிளகாய் – 12, பூண்டு – 10 பல், சின்ன வெங்காயம் – ஒரு கப், கொத்தமல்லி – ஒரு கொத்து, கறிவேப்பிலை – ஒரு கொத்து, புளி – சிறு நெல்லிக்காய் அளவிற்கு, உப்பு தேவையான அளவிற்கு.

- Advertisement -

‘மதுரை கார சட்னி’ செய்முறை விளக்கம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வர மிளகாய் அல்லது குண்டு மிளகாய் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. குண்டு மிளகாய் காரம் அதிகமாக இருக்கும் என்பதால் குண்டு மிளகாய் சேர்ப்பவர்கள் பத்து எடுத்துக் கொள்ளுங்கள். வர மிளகாய் என்றால் 12 எடுத்துக் கொள்ளுங்கள்.

onion

பின்னர் முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்து காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இந்த சட்னிக்கு கடைசியாக தாளிக்க வேண்டிய அவசியமில்லை. தாளித்து பின் வதக்கினால் நன்றாக தான் இருக்கும்.

- Advertisement -

பின்னர் மிளகாய்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மிளகாய் கருகி போய் விடக் கூடாது, அதில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து வதக்குங்கள். பூண்டு வதங்கியதும் சின்ன வெங்காயத்தை சுமார் ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் நன்கு வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் லேசாக சுருள வதங்கியதும், அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்ட வேண்டும்.

v-chutney4

பின்னர் அடுப்பை அணைத்து அப்படியே ஆற விடுங்கள். இவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை, நன்கு கெட்டியாக அரைத்து சுடசுட இட்லியுடன் பரிமாறினால் 10 இட்லி கொடுத்தால் கூட உங்களுக்கு பத்தவே பத்தாது. அந்த அளவிற்கு ருசி மிகுந்த இந்த மதுரை கார சட்னி நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பார்த்து பாராட்டுகளை அள்ளி விடுங்கள்.

- Advertisement -