கடன் தீர்ந்து செல்வம் பெருக மகாலட்சுமி தீபம்

mahalakshmi dheepam
- Advertisement -

இன்றைய கால மனிதனின் பெரும் சுமையே கடன் தான். இந்த கடனானது ஒருவரின் வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் அவருடைய வாழ்வே சின்னாபின்னம் ஆகி விடுகிறது. பலரும் நினைக்கலாம் கடன் வாங்காதவர்கள் யார் இருக்கிறார்கள் எல்லோரும் வாங்க தான் செய்கிறார்கள் என்று கேட்கலாம். இந்த கடனானது அவர்கள் வாழ்க்கையில் நுழைவதற்கு முன்பு இருந்த சந்தோஷம் கடன் என்னும் அரக்கன் நுழைந்த பிறகு நிச்சயமாக இருக்காது.

இந்த கடன் ஒருவர் வாழ்க்கையில் நுழைவதே அவர்களுடைய கர்ம பலனாலும் ஜாதக ரீதியான கோளாறாலும் தான் என்று சொல்லப்படுகிறது ஒருவருடைய ஜாதகத்தில் அவர்களுக்கான கட்டங்கள் சரியில்லாத போது நிச்சயம் அவர் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலைக்கு ஆளாவார் என்று சொல்லப்படுகிறது. அப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிரமப்படுவது அவருடைய கர்ம வினையின் பலனே என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

எது எப்படி இருந்தாலும் கடன் வந்து விட்டால் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் போய் விடும் என்பது மட்டும் உறுதி அப்படி சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் துன்பப்படுபவர்கள். நிலை வாசலில் இந்த ஒரு தீபத்தை ஏற்றும் போது கடன் விரைவில் அடையும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர மகாலட்சுமி தீபம் ஏற்றும் முறை

கடன் தீர வேண்டும் எனில் முதலில் நமக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும். வீட்டில் பணம் தங்க வேண்டும். இதை செய்தால் தான் அடுத்து கடனை அடைப்பதற்கான முயற்சியை நம்மால் எடுக்க முடியும். வருமானமே இல்லை என்றால் கடனை எப்படி அடைப்பது? அப்படியானால் வருமானத்தை அதிகரித்து தரக் கூடிய வழியை நாம் முதலில் பார்க்க வேண்டும்.

- Advertisement -

அதற்கான தீப பரிகார முறையை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். இந்த தீபமானது மகாலட்சுமி தாயாரை நினைத்து ஏற்றக்கூடிய மகாலட்சுமி தீபம். இந்த தீபத்தை பூஜையறையில் ஏற்றலாம். ஆனால் நிலை வாசலில் ஏற்றும் பொழுது இதற்கான பல மடங்கு கிடைக்கும். இப்போது இந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று பார்க்கலாம்.

இந்த தீபம் ஏற்ற மஞ்சள் நிறத்திலான திரி வேண்டும். அடுத்து இரண்டு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். தீபம் ஏற்ற சுத்தமான பசு நெய் இரண்டு அகல் விளக்கு இவையெல்லாம் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த விளக்கை நாம் சந்திப் பொழுதில் ஏற்ற வேண்டும். அதாவது மாலை ஆறு மணிக்கு மேல் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஏற்ற வேண்டும்

- Advertisement -

வீட்டில் நிலை வாசலில் உட்புறம் இரண்டு பக்கமும் பச்சரிசி மாவால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு மேல் இந்த வெற்றிலையை வைத்து வெற்றிலைக்கு மேல் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றங்கள். இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு வையுங்கள். அதாவது வெளியில் இருந்து உள்ளே வரும் போது தீபம் உங்கள் வீட்டின் உள்ளே பார்த்து எறிவது போல் இருக்க வேண்டும்.

இந்த தீபம் உங்கள் நிலை வாசலில் தினமும் ஏற்றும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அனுக்கிரகம் கிடைக்கும். அத்துடன் வீட்டில் வருமானம் அதிகரிக்கும். பண வரவு பெருகும் பணத்தடை நீங்கும். அது மட்டும் இன்றி கிரக கோளாறு கர்ம வினைகள் இவற்றினால் ஏற்படும் கடன் தொல்லைகள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை சதுர்த்தி திதி வழிபாடு

இந்த ஒரு தீபத்தினால் இத்தனை பலன்கள் கிடைக்கும் என்பது தான் இதில் குறிப்பிடத்தக்கது. இந்த தீப பரிகார முறையில் உங்களுக்கும் விருப்பம் இருப்பின் பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -