மீளாத கடனிலிருந்து மீள்வதற்கு மிளகு தீபம்! கார்த்திகை மாதம் முடிவதற்குள் இந்த விளக்கை ஏற்றினால், தை முடிவதற்குள் உங்களுடைய கடன் தீரும்.

milagu
- Advertisement -

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள். தை மாதம் உங்களுக்கு நல்ல காலமும் விடியலும் பிறப்பதற்காக, கார்த்திகையிலிருந்து உங்களுடைய பரிகாரத்தை நீங்கள் தொடங்குங்கள். நிச்சயமாக தை மாதம் உங்களுடைய கஷ்டங்கள் தீரும். மீளாத கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு சுலபமான ஒரு மிளகு தீப பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கார்த்திகை மாதம் விளக்கு வழிபாட்டிற்கு உரிய மாதம். அடுத்து வரக்கூடிய மார்கழி மாதமும் இறைவழிபாட்டிற்கு உரிய மாதம். ஆக மொத்தத்தில் இந்த இரண்டு மாதங்களும் நாம் தீபம் ஏற்றி வைத்துவிட்டு இறைவனை வழிபாடு செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கின்றோம். இந்த மாதத்தில் நாம் இந்த ஒரு தீபத்தை தொடர்ந்து ஏற்றி வரும்போது, கடன் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். மிளகு தீபத்தை வீட்டில் முறையாக எப்படி ஏற்றுவது என்பதை பற்றிய பதிவுதான் இது.

இந்த தீபத்தை வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் உங்களுடைய வீட்டில் ஏற்றலாம். காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு, நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்றி வைத்து விடுவீர்கள். இப்படி நிலை வாசலில் கார்த்திகை மாதம் விளக்கு ஏற்றினால் வீட்டில் செல்வ செழிப்பு பெருகும். அதன் பின்பு பூஜை அறைக்கு வந்து ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு அந்த எண்ணெயில் 3 மிளகு போட்டு விளக்கு ஏற்றி, கடன் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

காலை நேரத்தில் உங்களால் இந்த விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணிக்குள் இந்த விளக்கை உங்களுடைய வீட்டில் ஏற்றி வைக்கலாம். இந்த விளக்கு ஏற்றிய பின்பு ஒரு மணி நேரம் சுடர்விட்டு எரிய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு என்று தனியாக ஒரு மண் அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய விளக்கையே பயன்படுத்தலாம். பழைய மண் அகல் விளக்கை சுத்தமாக கழுவி விட்டு துடைத்து விட்டு, மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு மிளகுப்போட்டு தீபத்தை ஏற்றுங்கள்.

வாரத்தில் இரண்டு நாள் தான் ஏற்றப் போகிறீர்கள். ஒரு முறை விளக்கை ஏற்றி விட்டால் அந்த விளக்கில் இருக்கும் மிளகை மாற்றி விட வேண்டும். விளக்கு திரியையும் மாற்றி விட வேண்டும். விளக்கை நன்றாக துடைத்துவிட்டு மீண்டும் புதிய எண்ணெய் ஊற்றி தான் அடுத்த கிழமைக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

வீட்டில் பெண்களால் விளக்கு ஏற்ற முடியாத சமயத்தில் ஆண்களும் இந்த விளக்கை பூஜை அறையிலேயே ஏற்றலாம். இந்த விளக்குக்கு அடியில் ஒரு தட்டு வைத்து ஏற்றினால் போதும். இந்த விளக்கு எரியும்போது விளக்கத்திற்கு முன்பு அமர்ந்து ஒரு ஐந்து நிமிடமாவது மனதை ஒருநிலைப்படுத்தி குலதெய்வத்தை நினைத்து, அந்த வாராகி அம்மனை நினைத்து, இஷ்ட தெய்வங்களை நினைத்து, பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மகாலட்சுமியை நினைக்க மறக்காதீங்க.

மகாலட்சுமியின் அருள் கிடைத்தால் தான் கடன் பிரச்சனை தீரும். என்னுடைய கடன் பிரச்சனை தீர நல்ல வழி பிறக்க வேண்டும். கடனை அடைக்க நிறைய வருமானம் கிடைக்க வேண்டும், என்று நேர்மறை வார்த்தைகளை சொல்லி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த விளக்கை இத்தனை வாரங்கள் என்ற கணக்கில் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. கார்த்திகை மாதம் மார்கழி மாதம் முழுவதும் எத்தனை செவ்வாய்க்கிழமை எத்தனை சனிக்கிழமை ஏற்ற முடியுமோ ஏற்றுங்கள் தை மாதம் பிறக்கும் போது நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -