இந்த மந்திரத்தை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிப் பாருங்கள்! உங்களை வெல்ல எவராலும் முடியவே முடியாது தெரியுமா?

sivan-vilakku
- Advertisement -

தெய்வீக சக்தியை நம் பக்கம் சுலபமாக ஈர்க்கக் கூடிய ஒரு வழி தான் மந்திர பிரயோகம். கோவிலுக்கு செல்லும் பொழுது வெறுமனே சாமி கும்பிடாமல் உங்களுக்கு தெரிந்த மந்திரங்களையும், ஸ்தோத்திரங்களையும் உச்சரித்து பாருங்கள், அதற்குரிய பலனே தனிதான். சித்தர்கள் ஒரு விஷயத்தை உருவாக்க அதிசக்தி வாய்ந்த மந்திரங்களை பிரயோகிப்பது உண்டு. ஆக ஒரு பொருளுக்கு சக்தி கிடைக்க மந்திரம் தேவை, அதே போல நம் மனதிற்கு சக்தி கிடைக்க மந்திரங்களை உச்சரிப்பது சிறந்த பலன்களை கொடுக்கும். அந்த வகையில் எந்த மந்திரத்தை? எந்த நேரத்தில் உச்சரித்தால் நமக்கு சிவனருள் கிடைக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

sivan-god2

சிவ பக்தர்கள் சிவ சிவ என்கிற நாமத்தை தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருப்பார்கள். ‘ஓம் நமசிவாய’ என்கிற இந்த எட்டெழுத்து மந்திரம் எவர் ஒருவர் தன் வாழ்நாளில் அதிகமாக உச்சரித்து வருகிறார்களோ, அவர்களுக்கு மோட்சகதி நிச்சயம் உண்டு என்கிறது புராணம். அது போல விஷ்ணு பக்தர்களுக்கு, ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம் நற்கதியை பெற்றுக் கொடுக்கும். இப்படி ஒவ்வொரு மந்திரத்திற்கும், ஒவ்வொரு சக்திகள் இருக்கும் பொழுது காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை சொல்லக்கூடிய சிவ போற்றிகள் என்னென்ன?

- Advertisement -

காலையில் நீங்கள் எழுந்திருக்கும் பொழுது, ‘அண்ணாமலை எம் அண்ணா போற்றி, கண்ணார் அமுதக் கடலே போற்றி!’ என்கிற இந்த போற்றியை சொல்லிவிட்டு பின்னர் எழுந்து பாருங்கள் சுறுசுறுப்பு தன்னாலே வரும். அதே போல குளிக்க செல்லும் பொழுது நீங்கள் ‘சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி!’ என்று சொல்லிக் கொண்டே குளிக்கலாம். இதனால் கங்கையில் குளித்த பலன் உங்களுக்கு கிடைக்குமாம்.

sivan-temple

கோவிலுக்கு செல்லும் பொழுது கோபுர தரிசனத்தை கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆகும். அந்த கோபுர தரிசனத்தின் போது, ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’ என்று உச்சரித்துக் கொண்டே தரிசனம் செய்வது சிறப்பு! நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல போகிறீர்கள் என்றால், ‘காவாய் கனகக் குன்றே போற்றி, ஆவா எந்தனுக்கு அருளாய் போற்றி!’ இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

- Advertisement -

நல்ல நண்பர்களை காணும் பொழுது, ‘தோழா போற்றி, துணைவா போற்றி!’ என்றும், நீங்கள் தரையில் சம்மணம் போட்டு அமரும் பொழுது,’பாரிடை ஐந்தாய், பரந்தாய் போற்றி!’ என்றும், தண்ணீர் குடிக்கும் பொழுது, ‘நீரிடை நான்காய், நிகழ்ந்தாய் போற்றி!’ என்றும் சொல்லிவிட்டு அந்தந்த வேலைகளை செய்யலாம். ஒவ்வொரு அணுவிலும் ஈசன் நிறைந்து காணப்படுகிறார். ஒவ்வொரு விஷயத்திலும் அவரை போற்றி புகழ்ந்தால் புண்ணியம் பெருகும்.

lock-and-key

கடை வைத்திருப்பவர்கள் கடையைத் திறக்கும் பொழுது, ‘வாழ்வே போற்றி, என் வைப்பே போற்றி!’ என்று உச்சரிக்கலாம். அதே போல சமையலறையில் அடுப்பை பற்ற வைக்கும் பொழுது, ‘தீயிடை மூன்றாய், திகழ்ந்தாய் போற்றி!’ என்று உச்சரிக்க வேண்டும். சாப்பாடு சாப்பிடும் பொழுது, ‘தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி, இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி!’ என்று கூற வேண்டும்.

astro-sivan

திடீரென உங்களுக்கு மனதில் ஒரு விதமான அச்சம் குடி கொள்ளும் பொழுது, ‘அஞ்சேல் என்றிங்கு, அருளாய் போற்றி!’ என்று உச்சரித்தால் வந்த பயம் தன்னாலே ஓடிப் போய்விடும். அதே போல நீங்கள் தூங்க செல்லும் பொழுது, ‘ஆடக மதுரை அரசே போற்றி, கூடல் இலங்கு குருமணி போற்றி!’ என்று சொல்லிக் கொண்டே நீங்கள் தூங்கி பாருங்கள், சட்டென உறக்கம் வந்துவிடும். எல்லாமே இங்கு சிவ மயம் தான் எனவே அந்த ஈசனை இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் துணைக்கு அழைத்துக் கொண்டால், உங்களை வெல்ல எவராலும் முடியாவே முடியாது.

- Advertisement -