குக்கரில் சுலபமாக செய்யக்கூடிய கத்தரிக்காய் கிரேவி. இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்

brinjal
- Advertisement -

காலைவேளையிலலோ அல்லது இரவுவேளையிலலோ இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளை சமைக்கும் பொழுது அதற்கு தொட்டுக்கொள்ள ஒவ்வொரு நாளும் விதவிதமாக சைடிஷ்கள் செய்யவேண்டியிருக்கும். அவ்வாறு அனைத்து வீடுகளிலும் அதிகமாக செய்யக்கூடியது சட்னி வகைகள் தான். என்னதான் வித்தியாசமான சட்னிகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் செய்து கொடுத்தாலும் அவை வீட்டில் உள்ளவர்களுக்கு புதிய சுவையில் இருப்பதில்லை. தினமும் இதைத்தான் செய்வீர்களா என்று கேள்வி கேட்பார்கள். அவ்வாறு சற்று வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் கத்தரிக்காய் வைத்து செய்யும் இந்த சுவையான கிரேவியை ஒரு முறை செய்து பாருங்கள். அதிலும் மிகவும் சுலபமாக குக்கரில் செய்து பாருங்கள். வாங்க இதனை எப்படி சுலபமாக செய்வது என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

pachai-payaru-dosai1

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 300 கிராம், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணை – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளிய பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 300 கிராம் கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அவை கறுத்துவிடாமல் இருக்க தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.

onion-rice1

அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குக்கரை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் தனியாத்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தையும் பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிறிய தீயில் வைத்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும்வரை அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். பிறகு ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி ஒரு முறை கலைந்து விடவேண்டும்.

brinjal

அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் கிரேவி தயாராகிவிட்டது. இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அல்லது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவ்வாறு எந்த உணவுடன் சேர்த்துசாப்பிட்டாலலும் மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -