இன்று பாப ஹர தசமி! நீங்கள் செய்த அத்தனை பாவங்களுக்கும் விமோசனம் கிடைக்க, செய்ய வேண்டிய பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும்.

ramar
- Advertisement -

கங்காதேவி, ராமபிரானால் அவதாரம் எடுக்கப் பட்ட தினம் தான் இந்த பாப ஹர தசமி நாள் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. கங்கா ஸ்னானம் செய்தால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அந்த கங்காதேவி அவதரித்த இந்த நாளில் நம் வீட்டில் இருந்தபடியே, சுலபமான முறையில் வழிபாட்டு முறைகளை எப்படி மேற்கொண்டால், கங்கையில் நீராடிய புண்ணியத்தினை நம்மால் பெற முடியும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதுமட்டுமல்லாமல் இன்று இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நாம் செய்த பத்து விதமான பாவத்திற்கும் பாவவிமோசனம் கிடைத்துவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

river ganga

இன்று காலை நேரத்திலேயே இந்த கங்கா ஸ்நானத்தை நான் செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த நாளை பற்றி அறியாதவர்கள், இன்று காலை, இந்த பரிகாரத்தை செய்ய தவறவிட்டு இருப்பார்கள். இருப்பினும் பரவாயில்லை. வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த நாளை தவறவிட வேண்டாமே. நாம் செய்யவேண்டிய பரிகாரத்தை இனி வரக்கூடிய நேரத்தில் எப்படி செய்யலாம்.

- Advertisement -

பூஜையறையில் ஒரு பித்தளை சொம்பில் சுத்தமான தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த தண்ணீரில் ஒரு சொட்டு மஞ்சள் பொடியை கலந்து விட வேண்டும். இரண்டு அல்லது மூன்று துளசி இலைகள் கிடைத்தால் அந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளலாம். கங்கா தேவியை மனதார நினைத்துக்கொண்டு அந்த தண்ணீரில் உங்கள் ஆள்காட்டி விரலால் ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுதி விடுங்கள்.

sembu-sombu

இந்தத் தண்ணீர் கங்கா தீர்த்தத்திற்கு இணையான புனிதமான தண்ணீராக மாறி இருக்கும். பித்தளை சொம்பில் வைத்திருக்கும் இந்த தண்ணீரை பூஜை அறையில் வைத்து விட்டு தீபம் ஒன்றை ஏற்றி வைத்து, இரு கைகளையும் ஏந்தி கங்காதேவியை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து, செய்த பாவங்களுக்கு விமோசனம் தரும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். கண்களை மூடியபடி 5 நிமிடம் பூஜை அறையில் அமர்ந்து ‘ஓம் கங்கா தேவி தாயே போற்றி’ என்ற நாமத்தை உங்களால் முடிந்தவரை எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை உச்சரித்து விட்டு, அந்த சொம்பில் இருக்கும் தண்ணீரை குளிக்கின்ற தண்ணீரோடு கலந்து, ஸ்நானம் செய்திருக்க வேண்டும். காலை நேரத்தில் இதை செய்திருக்க வேண்டும்.

- Advertisement -

ஆனால் நேரம் தவறிவிட்டது என்பதால், இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரது தலையிலும் தெளித்து கொள்ளுங்கள். வெற்றிலை இருந்தால் அந்த வெற்றிலையில் இந்த தீர்த்தத்தை உங்கள் தலையிலும், வீடு முழுவதும் மூலை முடுக்குகளில் தெளித்து விட வேண்டும். வெற்றிலை கிடைக்கவில்லை என்றால் கையாலேயே தெளித்து விடுங்கள். நாம் செய்த பாவங்கள் அத்தனையும் நீங்கும். வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி நம் வீடு சுபிட்சம் அடையும்.

thulasi-theertham

இல்லை எங்களுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த தீர்த்தத்தில் தலை ஸ்நானம் செய்தால்தான் மனத் திருப்தி அடைய முடியும் என்று நினைப்பவர்கள், மதியம் 12 மணிக்குள் இந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து, தீர்த்தத்தை நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி, கங்காதேவியை மனதார நினைத்து ‘ஓம் கங்காதேவி தாயே போற்றி’ என்று மூன்று முறை உச்சரித்து இந்த தண்ணீரில் ஸ்நானம் செய்தாலும் தவறு கிடையாது.

ramar1

சரி, நாம் அறிந்தோ அறியாமலோ செய்யக்கூடிய அந்த பத்து வகைப் பாவங்கள் என்னென்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? 1. அடுத்தவர்கள் மனது புண்படும்படி கடும் சொற்களைப் பேசுவது. 2. மற்ற உயிரினங்களை வதைப்பது. 3. அடுத்தவர் மனைவியின் மீது ஆசை படுவது. 4. இழிவான தகாத வார்த்தைகளை உச்சரிப்பது. 5. ஒருவரைப் பற்றி பின்னால் குறை கூறுவது. 6. பொய் சொல்லி கோல் மூட்டுவது. 7. அடுத்தவர்கள் பொருள், அடுத்தவர்களுடைய சொத்து, அடுத்தவர்களுடைய காசு பணம் இவைகளை நாம் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது. நமக்கு சொந்தம் இல்லாததை நாம் அனுபவிக்கக் கூடாது.

ganga

8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை படுவது. 9. அனாவசியமாக ஒருவரை வெறுத்து ஒதுக்குவது 10. தகுதியற்றவர்களுக்கு தானம் கொடுப்பது. இப்படி இந்த தவறுகளும் நாம் செய்த பாவத்தில் அடங்கும். இவை மட்டும் தான் பாவங்கள் என்று குறிப்பிட்டு சொல்லிவிடமுடியாது. இதையும் தாண்டி நிறைய பாவங்களை மனிதர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும் அடிப்படையாக சொல்லப்பட்டுள்ள பட்டியல்களில் மேல் சொன்ன விஷயங்கள் அடங்கும். முடிந்தவரை இந்த பாவங்களை செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -