சமையலறையில் எப்போதும் நல்ல நறுமணம் வீச என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள சமையலறை குறிப்புகள் 5 இதோ உங்களுக்காக!

kitchen-coffee-powder
- Advertisement -

சமையலறையில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் பாதுகாப்பது அவசியம் ஆகும். முடிந்தவரை எல்லா பொருட்களையும் அவ்வபோது பிரஷ்ஷாக வாங்கி பயன்படுத்துவது தான் நல்லது, எனினும் சில சமயங்களில் இது போன்ற குறிப்புகள் தெரிந்து வைத்திருந்தால் நீண்ட நாட்கள் பிரஷ் ஆகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும். அப்படியான அட்டகாசமான 5 குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குறிப்பு 1:
வாழைக்காயை வாங்கி வந்த உடன் பயன்படுத்தி விட வேண்டும் இல்லை என்றால் சில நாட்களுக்குள் அது பழுக்க ஆரம்பித்து விடும் எனவே வாழைக்காய் காயாகவே இருக்க வாங்கி வந்த உடன் அதை தண்ணீரில் போட்டு வைத்து விடுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மட்டும் மாற்றிக் கொண்டே இருங்கள். இப்படி செய்தால் வாழைக்காய் நீண்ட நாட்களுக்கு காயாகவே இருக்கும் பழுக்காது.

- Advertisement -

குறிப்பு 2:
கருவேப்பிலை காம்பிலிருந்து உதிராமல் இருக்க ஒரு வாய் குறுகிய டம்ளர் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அடி பாகத்தில் கொஞ்சம் போல் தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள். கால்வாசி கூட தண்ணீர் இருக்கக் கூடாது. கறிவேப்பிலை கொத்தை ஒவ்வொன்றாக எடுத்து அதன் அடிப்பாகத்தில் இருக்கும் இலைகளை மட்டும் உருவி கொள்ளுங்கள். மீதம் இருக்கும் முக்கால்வாசி இலைகளில் தண்ணீர் படாமல் கீழிருக்கும் காம்பு பகுதியை மட்டும் தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு டம்ளருக்குள் அடுக்கி வையுங்கள். இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜிலும் வைக்கலாம். பத்து நாட்கள் வரை இலைகள் உதிராமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

குறிப்பு 3:
கொத்தவரங்கா வத்தல் தயாரித்து சாப்பிட்டால் நிறைய நார் சத்து கிடைக்கும். நார் சத்து நிறைந்துள்ள இந்த கொத்தவரங்காயை தேவையான அளவுக்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஐந்து நிமிடம் நன்கு மூடி போட்டு வேக வைத்தால் சூப்பராக வெந்து வரும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு மொட்டை மாடியில் நல்ல வெயிலில் மூன்று நாட்கள் காய வைத்தால் வத்தல் போல மொறுமொறுன்னு உடைந்து வரும். இதை எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது தயிரில் ஊற வைத்தும் சாப்பிட்டு பார்க்கலாம், ரொம்பவே டேஸ்டாக இருக்கும். குழம்பு வைக்கவும் இந்த வத்தலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு 4:
புதிய புளி வாங்கி வந்தால் அதில் இருக்கும் விதைகள் மற்றும் நார் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்துவிட்டு அதை ஒரு காற்று புகாத ஜிப்லாக் கவர் அல்லது பாலித்தீன் பையில் போட்டு ஒரு டப்பாவில் மூடி போட்டு ப்ரீசரில் வைத்து விட்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கறுத்து போகாது. பூச்சிகள், வண்டுகள் எதுவும் வராது. நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக அப்படியே இருக்கும்.

குறிப்பு 5:
சமையலறையில் திடீரென துர்நாற்றம் வீசினால் அல்லது ஏதாவது ஒரு பொருளை நீங்கள் தீய்த்து விட்டால் சமையலறை முழுவதும் ஒரு விதமான வாடை எடுக்க துவங்கி விடும். மேலும் சமையல் அறையில் இருக்கும் கரப்பான்கள் பூச்சிகள் எதுவாக இருந்தாலும் வாரம் ஒரு முறை இப்படி செய்யுங்கள். சமையலறை முழுவதும் சுத்தமாகிவிடும். நல்ல வாசனையுடனும் இருக்கும். ஒரு வாணலியை சுட வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் காபி பவுடரை போட்டு புகை வர செய்யுங்கள். இந்த புகையை சமையலறை முழுவதும் பரவ செய்துவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இதனால் அடுப்பங்கரையில் இருக்கும் பூச்சிகள் அனைத்தும் வெளியில் ஓடிவிடும். அடுப்பங்கரையில் இருக்கும் துர்நாற்றமும் நீங்கி நல்ல வாசம் வீசும்.

- Advertisement -